News
Loading...

12 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் மருதூர் மேலக்காலை தூர் வாரவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

12 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் மருதூர் மேலக்காலை தூர் வாரவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

12 ஆயிரம்  ஏக்கர்  பாசன வசதி பெறும் மருதூர் மேலக்காலை தூர் வார வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தாமிரபரணியில் 7வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இதில் மருதூர் மேலக்கால்வாய் மிக நீளமான கால்வாய். குட்டைக்கால் குளம், கொள்ளீர்குளம், செய்துங்கநல்லூர் குளம், நாட்டார்குளம், தூதுகுழி குளம், கருங்குளம், பெட்டை குளம், கிருஷ்ணன் குளம், வீரளப்பேரி குளம், கால்வாய் குளம், தென்கரை குளம், நொச்சிகுளம், முதலாம்மொழி குளம், வெள்ளிக்காயூரணி குளம், தேமாங்குளம், புதுக்குளம் உள்பட பல குளங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது.  சாத்தான்குளம் பகுதியில் வறட்சியை போக்க கூடிய சடையனேரி, புத்தன்தருவை குளங்களுக்கும் மழைக்காலங்களில் இங்கிருந்து தான் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது.

இந்த கால்வாயில் கூடுதல் தண்ணீர் செல்ல முடியவில்லை என சுமார் ரூ.25 கோடியில் பல்வேறு மராமத்து பணிகள் நடத்தப்பட்டது. 
ஆனாலும் போதிய அளவு தண்ணீர் கொண்டு செல்லும் அளவுக்கு இந்த கால்வாய் இல்லை. இக்கால்வாயில் தற்போது அமலை செடிகள் அடர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து  விவசாயிகள் கூறுகையில், சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பினை கொண்டது மருதூர் மேலக்கால்வாய். இக்கால்வாய் சீரமைக்க பல கோடி ரூபாய் நிதி ஓதுக்கப்பட்டது. ஆனாலும் போதிய தண்ணீர் தேக்க முடியவில்லை. கார் சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முறையாக குளங்களுக்கு போய் சேரவில்லை. கால்வாயில் ஆங்காங்கே  அமலைச்செடிதான் அடர்ந்து காணப்படுகிறது. 

எனவே பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் முன்பு அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் என்றனர். தாமிரபரணியில் கார், முன்கார், பிசானம் ஆகிய மூன்று சாகுபடியும் அளிக்கக் கூடிய ஓரே இடம் மருதூர் மேலக்கால்வாய். எனவே இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.