News
Loading...

தமிழகத்திற்கு திடீரென 15,000 கன அடி தண்ணீர் திறப்பு

தமிழகத்திற்கு திடீரென 15,000 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடக மாநிலத்தின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா-தமிழக விவசாயிகளின் ஜீவநதியாக விளங்கும் கே.ஆர்.எஸ். அணை முழுமையாக நிரம்பவில்லை என்றாலும் தமிழகத்திற்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் நேற்று மாலை நிலவரப்படி நீர்மட்டம் 96.90 அடியாக இருந்தது. (அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி என்பது குறிப்பிடதக்கது) அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 022 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டுள்ளது. பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரத்து 803 கன அடி திறக்கப்பட்டுள்ளது. 

மைசூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருவதின் காரணமாக 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,277.37 கனஅடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 27 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 454 கன அடி நீர் காவிரி நதியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 15 ஆயிரத்திற்கும் அதிகம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்திறப்பு தொடர்பாக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதை தொடர்ந்து, கர்நாடக அரசு, அவசர, அவசரமாக தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.