News
Loading...

இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது

இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி கடந்த ஒரு மாதமாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. கிங்ஸ்டனில் நடைபெற்ற 2-வது போட்டி டிராவில் முடிந்தது.

கிராஸ் ஐலேட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயின் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் வரை 22 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது மழை குறுக்கீட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. 2-வது நாள் ஆட்டமும் மழையினால் முழுவதும் தடைப்பட்டது. அதன்பின் மழை பெய்யாவிடிலும்  பவுண்டரி லைன் அருகே மைதானம் மிகவும் மோசமடைந்தது. இதை சரிசெய்ய எவ்வளவு முயற்சி எடுத்த போதிலும் சரிசெய்ய முடியவில்லை.

இதனால் கடைசி மூன்று நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டது. ஆகவே, இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.