News
Loading...

2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் பலி; 15 பேர் படுகாயம்

2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் பலி; 15 பேர் படுகாயம்

முசிறியில் இன்று அதிகாலை 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஸ் டிரைவர் இறந்தார். மற்றொரு பஸ்சின் டிரைவர் உள்பட 15 பேர்  படுகாயமடைந்தனர். 

சென்னையில் இருந்து ஒரு அரசு பஸ் திருச்சி மாவட்டம், முசிறிக்கு வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் இந்த பஸ்  முசிறி சுடுகாடு பிரிவு அருகே திருப்பத்தில் வந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது.
இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் முசிறி பஸ் டிரைவர் சுதாகர்(41) அந்த இடத்திலேயே இறந்தார். இவர் முசிறி அடுத்த பைத்தம்பாறையை  சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன்.

இதில் வேளாங்கண்ணி பஸ் டிரைவர் நாகப்பட்டினம் சிவக்குமார்(40), நாகை மாரிமுத்து(44), திருவாரூர் ராஜகோபால்(40), சித்தாம்பூர் அண்ணாதுரை(40), முசிறி  தினேஷ்(29), ஏவூர் சுப்பிரமணியன்(35), ஆமூர் பெரியசாமி(34), திருவாரூர் அரிகிருஷ்ணன்(26), தினேஷ்(24), திருச்சி கோபால கிருஷ்ணன் (38), பெங்களூரு மரியா(32),  சூரம்பட்டி சுப்பைா(54), ஏவூர் சண்முகம்(47), தஞ்சை நாகவல்லி(29), உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 9 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு  செல்லப்பட்டனர். மற்றவர்கள் முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். முசிறி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் வேளாங்கண்ணி பஸ் டிரைவர் கவனக்குறைவாக வந்ததால் விபத்து நடந்ததாகவும், வேளாங்கண்ணி பஸ் டிரைவர் அஜாக்கிரதையாக வருவதை அறிந்த  முசிறி டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்பியும் விபத்தை தவிர்க்க முடியாமல்போய்விட்டது என்றும் பயணிகள் தெரிவித்தனர். இறந்த டிரைவர் சுதாகருக்கு பத்மா (36)  என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

English Summary : 2 public buses in the morning to face Musiri bus driver died in clashes. Another 15 people were injured

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.