News
Loading...

ரெய்டு : திருவள்ளூரில் 300க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் தப்பி ஓட்டம்

ரெய்டு : திருவள்ளூரில் 300க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் தப்பி ஓட்டம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக திருவள்ளூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் என்ன காய்ச்சல் என்பது தெரியாமலேயே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ரூ.50 அல்லது 100 பெற்றுக் கொண்டு போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்கள் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருக்கின்றனர். மேலும் பலர் லைசென்ஸ் இல்லாமல் மருந்துகடைகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் கிராம மக்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலிக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதால், பலருக்கு நோய் தொற்றுதல் அதிகமாகியுள்ளது. சிலர் டாக்டர்களை போல ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர் என்றனர்.

சமூக ஆர்வலர்களின் புகார் காரணமாக, போலி டாக்டர்களை கண்டுபிடிக்க மருத்துவ துணை இயக்குனர் (குடும்ப நலம்) தயாளன் தலைமையில் குழுவினர் காக்களூர் பூங்கா நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் திடீர் சோதனை நடத்தினார். இவர் வருவதையறிந்த பல போலி டாக்டர்கள், தங்கள் மருந்துக்கடைகளை அடைத்து விட்டு ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையில், பிளஸ் 2 முடித்துவிட்டு எம்.பி.பி.எஸ்., என போர்டு வைத்து 3 இடங்களில் கிளினிக் நடத்திவந்த போலி டாக்டர் சுதர்ஷன்(33) என்பவர் சிக்கினார். இம்மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 போலி டாக்டர்கள் சிக்கியுள்ளனர். ஏற்கனவே கிராமங்களில் கிளினிக் நடத்திவந்த 300க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் பலர், சுகாதார அதிகாரிகளின் திடீர் ஆய்வை அறிந்து, தங்களது கிளினிக்குகளை மூடிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.