News
Loading...

மரவள்ளிக்கிழங்குடன் கஞ்சா சாகுபடி செய்த 4 ‘விவசாயிகள்’ கைது

மரவள்ளிக்கிழங்குடன் கஞ்சா சாகுபடி செய்த 4 ‘விவசாயிகள்’ கைது

சத்தியமங்கலம் அருகே கஞ்சா சாகுபடி செய்த 4 பேரை போலிசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் அதிரடி படையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது உகினியம் மலை கிராமத்தில் மரவள்ளிக்கிழங்குடன் கஞ்சா செடி பயிர் செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அக்கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, அவரது மகன் பத்ரன், நஞ்சுண்டன், மாதேஸ் ஆகியோரை அதிரடிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.