News
Loading...

மல்யுத்த வீரரை மணக்கிறார் சாக் ஷி மாலிக்

மல்யுத்த வீரரை மணக்கிறார் சாக் ஷி மாலிக்

மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக், சக மல்யுத்த வீரரை திருமணம் செய்யவுள்ளார்.

பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டி நடந்தது. அபினவ் பிந்த்ரா, ககன் நரங், சானியா, செய்னா என, பல முன்னணி நட்சத்திரங்கள் ஏமாற்றிய நிலையில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் (வெண்கலம்) வென்று தந்தவர் மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக். 

அடுத்து டோக்கியோ (2020) ஒலிம்பிக்கில் எப்படியும் தங்கம் வெல்வேன் என்ற உறுதியில் உள்ளார். இந்நிலையில் மிக விரைவில் சக வீரரை திருமணம் செய்யவுள்ளார் சாக் ஷி, 23. எதிர்கால கணவரின் பெயரை தெரிவிக்க மறுத்த சாக் ஷி, திருமணம் குறித்து கூறியது:

என்னை திருமணம் செய்யவுள்ளவர் மிகவும் ஆதரவாக இருப்பார். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவு நனவாக உதவியாக இருப்பார். 

திருமணத்திற்குப் பின் போட்டிகளில் தயாராக எனக்கு கைகொடுப்பார். அதேநேரம் திருமணம் என்பது எனது மல்யுத்த வாழ்க்கைக்கு பெரும் தடையாக இருக்காது என, பெரிதும் நம்புகிறேன். 
இவ்வாறு சாக் ஷி கூறினார்.

English Summary : Sakshi Malik marries wrestler

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.