News
Loading...

சமூக சேவகி அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம்

சமூக சேவகி அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம்

சமூக சேவகி அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகன் நகரில் செப்டம்பர் 4 ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ரோம் முழுவதும் சிறப்பு இசை நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 4 ம் தேதி நினைவு தபால் தலையும் வெளியிடப்பட உள்ளது.

இவ்விழாவில் 5,00,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சேரிட்டியை சேர்ந்த 350 கன்னியாஸ்திரிகளும் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் 2 மணிநேரம் நடக்க உள்ள இவ்விழா இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது.

இந்தியா சார்பில் மொத்தம் 100 பேர் கலந்து கொள்ள உள்ளதாக அந்நாட்டிற்கான இந்திய தூதரர் அனில் வாத்வா தெரிவித்துள்ளார். அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்குவதை கொண்டாடும் விதமாக ரோம் முழுவதும் புத்தகங்கள், பத்திரிக்கைகள் என அனைத்திலும் அன்னை தெரசாவின் உருவங்களே காண முடிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.