News
Loading...

திருவனந்தபுரம்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது!

திருவனந்தபுரம்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

திருவனந்தபுரம்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் இன்று அதிகாலை கொச்சி அருகே தடம் புரண்டன. இதை தொடர்ந்து அவ்வழித்தடத்தில் செல்லும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருவனந்தபுரம்-மங்களுர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண் 16347) நேற்றிரவு 8.40 மணியளவில் மங்களூர் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில், எர்னாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா மற்றும் காருகுட்டி ரயில் நிலையங்களுக்கிடையே வந்து கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திடீரென ரயிலின் 12 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகி, பக்கவாட்டில் தடம் புரண்டன.

திருவனந்தபுரம்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது!

இந்த ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ள நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களு, அந்த ரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டு மாற்று ரயில்கள் மற்றும் பேருந்துகளின் மூலம் அருகாமையில் உள்ள எர்னாகுளம் மற்றும் திரிச்சூர் நகரங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதால், சேதம் அடைந்த தண்டவாளங்களை சீரமைக்க சுமார் 10 மணிநேரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால், எர்னாகுளம்-திரிச்சூர் வழிதடத்தில் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும், திருவனந்தபுரம்-மும்பை, கன்னியாகுமரி-பெங்களூர், ஆலப்புழா-தன்பாத், திருவனந்தபுரம்-கோரக்பூர் ரப்திசாகர், திருவனந்தபுரம்-ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய தொலைதூர ரயில்கள், திருநெல்வேலி-ஈரோடு மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.