News
Loading...

அரசுப் பள்ளி 'கழிவறைகளின்' அவலங்கள்

அரசுப் பள்ளி  'கழிவறைகளின்' அவலங்கள்

சட்டமன்றத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்ட்டினின் கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “இந்த அரசு தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்திவிட்டது. மேலும், இந்த ஆண்டில் மட்டும் பள்ளிகளில் 4,339 கழிப்பறைகள் கட்ட ரூ.59.25 கோடி ஒதுக்கி உள்ளது” என்றார்.

அரசுப் பள்ளி  'கழிவறைகளின்' அவலங்கள்

குழந்தைகள் பள்ளியில் இடைநிற்றலுக்கும், கழிப்பறைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும் போது, அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுவிட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால், உண்மை நிலவரம் அப்படி இருப்பதாக தெரியவில்லை.

திருப்பூர் மாவட்டத்தின் நிலை மட்டும் அல்ல!

அரசுப் பள்ளி  'கழிவறைகளின்' அவலங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது கே. செட்டிப்​பாளையம் தொடக்க பள்ளி. அந்த மாவட்டத்தில் உள்ள பழமையான பள்ளிகளில் இதுவும் ஒன்று. ஏறத்தாழ 190 மாணவர்கள் பயில்கிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் பெண் குழந்தைகள். அந்தப் பள்ளியில் ஐந்து பெண் ஆசிரியர்கள் உட்பட ஆறு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அங்கு கழிப்பறை வசதி இல்லை. 1962-ம் ஆண்டு கழிப்பறை சிதிலம் அடைந்ததால், சில ஆண்டுகளுக்கு முன்தான் அதை இடித்து இருக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்காக மட்டும் ஒரு கழிப்பறையைக் கட்டி இருக்கிறார்கள். ஆனால், செப்டிக் டாங்க் அங்கு இல்லை. இதனால் அந்தக் கழிப்​பறையும் உபயோகத்துக்கு வராமல் இருக்கிறது. இது ஏதோ திரும்பூர் மாவட்டத்தின் நிலை மட்டும் அல்ல. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளின் நிலை இதுதான்.

தமிழகத்தில் மொத்தம் 57,583 பள்ளிகள் உள்ளன. அதில், அரசு பள்ளிகள் 37,201. இதில் பல பள்ளிகளில் கழிப்பறை இல்லை அல்லது  பயன்படுத்த​முடியாத நிலையில் இருக்கின்றன.

கட்டடம் மட்டும் கழிப்பறை ஆகாது!

அரசுப் பள்ளி  'கழிவறைகளின்' அவலங்கள்

இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர​பாபுவிடம் பேசியபோது, ‘‘சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், தமிழகத்தின் பல பள்ளிகளில் இன்னும் முழுமையாகக் கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. கழிப்பறை வசதி உள்ள பள்ளிகளிலும், பெரும்பாலும் தண்ணீர் வசதி இருப்பதில்லை. கழிப்பறை என்றால் கட்டடம் கட்டித் தருவது மட்டும் இல்லை. முறையான தண்ணீர் வசதிசெய்து தந்திருக்க வேண்டும். செப்டிக் டாங்க் கட்டித் தந்திருக்க வேண்டும். அதை சுத்தம்செய்ய பணியாளர்களை நியமித்து இருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், நாங்கள் கழிப்பறைகளைக் கட்டித் தந்து இருக்கிறோம் என்று சொல்வது ஏமாற்று வேலை” என்கிறார்.

கழிப்பறையைக் கட்டுவதுடன் மட்டும் அரசு வேலை முடியவில்லை!

அரசுப் பள்ளி  'கழிவறைகளின்' அவலங்கள்

ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது, “அரசு பல கோடி ரூபாயை கழிப்பறை கட்டுவதற்கு ஒதுக்கி இருக்கிறது. ஆனால், கட்டப்பட்ட கழிப்பறைகளைப் பராமரிப்பதற்கு போதுமான அளவுக்குப் பணியாளர்கள் இல்லை. இதிலும் அரசு தன் கவனத்தைச் செலுத்த வேண்டும். கழிப்பறையைக் கட்டுவதுடன் மட்டும் அரசின் வேலை முடிவதில்லை. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் மாணவர்களுக்குக் கற்றத் தரவேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்திலிருந்து வருபவர்கள். அதிலும் பெண் பிள்ளைகள், தெரியாமல் நாப்கின்களை கழிப்பறைகளில் போட்டுவிடுகிறார்கள். இது சுகாதாரக்கேட்டுக்குக் காரணமாக ஆகிவிடுகிறது. அதனால், ஆசிரியர்கள் கழிப்பறைகள் குறித்தும், அதை எப்படி பயன்படுத்துவது, சுகாதாரமாக வைத்துக் கொள்வது என்பது குறித்தும் உரையாட வேண்டும்” என்கிறார்.

இது கல்வி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல!

அரசுப் பள்ளி  'கழிவறைகளின்' அவலங்கள்

பள்ளிகளில் கழிப்பறை இல்லாதது கல்வி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. அது உடல்நலம் சார்ந்ததும் கூட. ஆம், பள்ளிகளில் கழிப்பறை இல்லை அல்லது சுகாதாரமாக இல்லை என்றால், திறந்த வெளியில் செல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு, அடக்கி வைத்துக்கொள்கிறார்கள் அல்லது குறைவாக தண்ணீர் அருந்திவிட்டு பள்ளிக்கு செல்கிறார்கள். இது இரண்டும் மோசமான நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அரசுப் பள்ளி  'கழிவறைகளின்' அவலங்கள்

இதுகுறித்து சிறுநீரகவியல் மருத்துவர், பாலசுப்ர​மணியம், “நீண்ட நேரமாக சிறுநீரை அடக்கி வைத்தால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். தொற்று தீவிரமாகி வலி, அரிப்பு, எரிச்சல், துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் அதிகரித்து அறுவைசிகிச்சை வரை கொண்டுசெல்லும். உடல் கழிவே மலம். அந்தக் கழிவை அடக்கி வைக்கும் போது மலப்பை, மலவாய் பாதைகளில் கிருமிகள் பெருகத் தொடங்கும்.

அரசுப் பள்ளி  'கழிவறைகளின்' அவலங்கள்

சிறுநீர் வருமோ என்று குறைவாக நீர் அருந்தும் போது, நீர் வறட்சி (Dehydration), சோர்வு, தலைவலி, சருமப் பிரச்னைகள், உடல் உஷ்ணம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். மலம் கழிக்கத் தோன்றும் என்று சாப்பிடாமல் இருந்தால் பசி, மயக்கம், சோர்வு, தலைவலி ஆகியவை உண்டாகி உடலை பலவீனமாக்கி நோய்களுக்கு வாசலாக அமையும்.” என்கிறார்.

அரசுப் பள்ளி  'கழிவறைகளின்' அவலங்கள்

தேசத்தின் எதிர்காலத்துக்கும் கழிப்பறைகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம், பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்றால், குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படும், மனச்சோர்வு ஏற்படும். நிச்சயம் பாடத்தில் கவனத்தைக் குவிக்க முடியாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கழிப்பறையை சாதாரண பிரச்னையாக அணுகாமல், அனைத்துப் பள்ளிகளிலும், தண்ணீர் வசதியுடன் கொண்ட கழிப்பறையை அரசு ஏற்படுத்த வேண்டும். அதை பராமரிப்பதற்கென ஆட்களை நியமிக்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.