News
Loading...

செங்குத்துத் தோட்டம்! கார்ப்பரேட் விவசாயம் களைகட்டுது!

செங்குத்துத் தோட்டம்! கார்ப்பரேட் விவசாயம் களைகட்டுது!

மக்கள்தொகை அதிகரிப்பால் அதை ஈடுகட்ட நகரமயமாக்கல் கட்டாயமாகிறது. என்னதான் வாழ்க்கை முறைகள் மாறினாலும் பணத்தைச் சாப்பிட்டு உயிர்வாழ முடியாதே. பூமி வெப்பமடைதலால் விவசாயத்துக்குத் தேவையான நீரின் அளவும் குறைந்துவிட்டது. விவசாய நிலங்களும் வேறு வழியில்லாமல் கட்டடங்களாக உருமாறிவிட்டன. எல்லாவற்றுக்கும் மாற்றாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என புதுமையியலாளர்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து ஒரு யோசனையைப் பல ஆண்டுகளாக முன்வைத்து, இப்போது அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். அதுதான் இந்த செங்குத்துத் தோட்டம் எனப்படும் Aero Farm.

செங்குத்துத் தோட்டம்! கார்ப்பரேட் விவசாயம் களைகட்டுது!

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் தொங்கும் தோட்டம் போல வித்தியாசமான செங்குத்தான தோட்டத்தை அமைத்திருக்கிறார்கள். தாவரங்கள் வளருவதற்கு மண், சூரிய ஒளி ஆகியவை அவசியம் என்கிற விதியையே தலைகீழாகப் புரட்டிப்போடும் விதமாய், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் டிரேக்களில் துணிகள், எல்.இ.டி விளக்குகள், காற்றாடிகளை வைத்தே காய்கறிகளை விளைவிக்கிறார்கள். அடுக்குக்காக ஒரே இடத்தில் பல மட்டத்தில் இந்த முறை விவசாயத்தைச் செய்ய முடியும் என்பதால் குறைந்த இடமே போதுமானது. சாதாரண கீரைவகைகள் முதல் கேரட், முட்டைகோஸ், தக்காளி வரை கிட்டத்தட்ட 250 வகையான காய்கறிகளையும் இந்த முறையில் விளையவைக்க முடியும் எனச் செய்து காட்டியிருக்கிறார்கள்.

செங்குத்துத் தோட்டம்! கார்ப்பரேட் விவசாயம் களைகட்டுது!

இதற்கு உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தவே இல்லையாம். மண்ணில் செய்யும் விவசாயத்தை விட 95 சதவிகிதம் குறைவான நீரே பயன்படுகிறதாம். ‘1,300 ஏக்கர் நிலத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளைவிட பத்து மடங்கு அதிகமாக இந்தத் தோட்டத்தின் மூலம் விளைவிக்க முடியும். மேலும் வருடத்திற்கு 900 டன் காய்கறிகளை உற்பத்தி செய்து அனுப்பலாம்’ எனவும் நம்பிக்கைத் தெரிவிக்கிறார் இந்தத் தோட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான டேவிட் ரோசன்பெர்க். 

கார்ப்பரேட் விவசாயம் களைகட்டுது!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.