News
Loading...

வெல்த் வாரியர் புத்தகம்

வெல்த் வாரியர் புத்தகம்

புத்தகத்தின் பெயர் :     வெல்த் வாரியர் (Wealth Warrior - The Personal Prosperity Revolution)

ஆசிரியர் :     ஸ்டீவ் சாண்ட்லர் (Steve Chandler)

பதிப்பகம் :     மெளவ்ரீஸ் பஸ்ஸெட் (Maurice Bassett)

நான் பரம ஏழை; எனக்கு உடல் ஊனம்; நான் கல்லூரியில காலடி எடுத்து வைக்காதவன்... இப்படி பல குறைகள் நம் மனதுக்குள் உண்டு. நாமெல்லாம் வாழ்க்கையில் எப்படி உருப்படப் போகிறோம், எங்கே சொத்தையும் சுகத்தையும் சேர்க்கப் போகிறோம் என்று புலம்புகிறவர்கள் நம்மில் பலர். ஆனால், ‘வெல்த் வாரியர்’ (பொருள்வளம் சேர்க்கும் சூரன்) என்னும் புத்தகத்தை எழுதிய ஆசிரியரின் வாழ்க்கைக் கதையைக் கேட்டால், நம் குறை எல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்கத் தொடங்கிவிடுவோம். 

எனக்குப் பிறவியிலேயே ஒரு பிரச்னை. எல்லா மனிதர் களுக்கும் சாதாரணமாக இருக்கிற மரபணு ஒன்று எனக்கு இல்லை. இந்த மரபணுதான்  ஒரு வேலையைச் சிரத்தையுடன் கஷ்டப்பட்டு செய்து முடிக்க உதவுவது. அந்த மரபணுக் குறைபாடு எனக்கு இருக்கிறது. என் குடிகாரத் தந்தையையும், நோய்வாய்ப்பட்ட மனைவியை யும்கூட என்னால் சமாளித்து விட முடியும். ஆனால், இந்த மரபணுப் பிரச்னையை வைத்துக்கொண்டு எப்படி ஜெயிப்பது?  

மேல்நிலைப்பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது மிகுந்த எரிச்சலுடனேயே நான் இருந்தேன். மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், சிறந்த கல்லூரிகள் எனக்குக் கதவை அடைத்தன.  என்னை வரவேற்ற கல்லூரி ஒரு பார்ட்டி கலாசாரம் உள்ள கல்லூரி.  
முதல் பருவத்துக்கான பரீட்சை வந்தது. நான் ஒரு பரீட்சையையும் எழுதவில்லை. அடுத்த வருடம் பரீட்சையில் தேர்வடையாவிட்டால் கல்லூரியில் இருந்து அனுப்பி விடுவோம் என்று வீட்டுக்கு தபால் போனது. ‘அடுத்த ஆண்டும் ஃபெயில் ஆனால் வேலைக்குப் போக வேண்டும்’ என  பெற்றோர்களிடம் வசமாக திட்டு வாங்கினேன்.    

படிப்பு முடியும் முன்பே நான் முழுமையான மதுப் பழக்கத்துக்கு அடிமையானேன்.  வாழ்க்கையில் என்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் முன்னேற் றம் கண்டனர்,  என்னைத் தவிர்த்து. ஏனென்றால்,  முன் னேற்றத்துக்கான மந்திரம் என்ன என்று எனக்குத்  தெரிய வில்லை.      12  வருடங்களுக்குப் பின்னால் நான் எப்படியோ ஒரு பட்டதாரி  ஆனேன். 

இத்தனை சிக்கல்கள் இருந்தும் நான் எப்படி சாதித் தேன் தெரியுமா? சில கேள்விகள், அதற்கான பதில் என் மிச்ச வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டது.  நான் கண்டுகொண்ட உண்மைகள் என்ன தெரியுமா?

முதலில், நீங்கள் யார் என்ற கேள்வியைக் கேளுங்கள். நான் படிக்காதவன், ஏழை, குக்கிராமத்துக்காரன், குள்ளம், கறுப்பு... என்கிற விஷயங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு,  நீங்கள் யார் என்று யோசியுங்கள்.  கொஞ்சம் தூசு தட்டி, தூர் வாரி உங்களுக்குள் உங்களைத் தேடுங்கள். உங்களிடம் இருக்கும் உயர்ந்த குணங்கள் உங்களுக்குத் தென்படும். 

நீங்கள் என்ன நினைக்கிறீர் கள், எந்தளவுக்கு அர்ப்பணிப்பு குணம் நிறைந்தவர்,  உங்களுக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதைப் பற்றி யெல்லாம் உலகம் கவலைப் படாது. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைக்  கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். உங்கள் செயல்களுக்கு மட்டுமே உலகம் ஈடுதரும் என்பதற்கு தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையே உதாரணமாகச் சொல்கிறார் ஆசிரியர்.

‘‘கல்லூரியில் படித்து முடித்த பின், குடிப் பழக்கத்துக்கு அடிமையான ஆசிரியருக்கு ஒரு செய்தித்தாளில் விளையாட்டுச் செய்திகளை எழுதும் நிருபர் வேலை கிடைத்தது. ஒரு விளையாட்டு நிகழ்ச்சியை கவரேஜ் செய்யச் சொன்னார்கள். அந்த விளையாட்டு நிகழ்ச்சியை  ரேடியோவில் கமெண்ட்ரி சொல்வார்கள். என் மரபணுக் குறைவு காரணமாக, நான் வீட்டில் மது அருந்தியபடி ரேடியோ கமெண்ட்ரியைக் கேட்டு ரிப்போர்ட் அனுப்பி விட்டேன். 

அதைப் படித்துப் பார்த்த வாசகர்கள், என்ன ஒரு தத்ரூப மான ரிப்போர்ட் என்று என்னைப் பாராட்டித் தள்ளினார்கள். நிகழ்ச்சிக்குப் போகாமலே அதுபற்றி எல்லோரையும் ஏமாற்றியது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், நீண்ட நாட்கள் இது போல் ஓட்ட முடியாது என்று தெரிந்துகொண்டேன். இருந்தாலும்,  நமக்குள்ளேகூட இப்படி ஒரு திறமை இருக்கிறதே என்பதை என் மூளை உணர்ந்த அந்த நிமிடமே நல்லதொரு  திருப்புமுனையாக அமைந்தது எனக்கு. நாம கொஞ்சம் திருந்தினா நல்லா இருக்குமோ என்று நினைத்தேன்.   

குடிப்பழக்கம் என்னதொரு வியாதி? அதை ஒழித்துக் கட்டினால்தான் உருப்படுவோம் என்று நினைத்து, அதை மறக்க பயிற்சிகள் செய்தேன். ஒரு வழியாக குடியிலிருந்து மீண் டேன். அப்புறம்தான் ஜாலியாக வெல்த் வாரியர் ஆனேன்’’ என்கிறார் ஆசிரியர். 

‘‘உங்கள் நினைப்பே உங்கள் பிழைப்பு என்பதால் உங்களைப் பற்றிய நெகட்டிவ் எண்ணங் களை ஒருபோதும் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் மாறக்கூடியவையே என்று நினையுங்கள். நீங்கள் சோம்பேறி யாக இருந்தால், பிஸியாக இருக்க முயற்சியுங்கள்.   எதுவும் நிரந்தரம் இல்லை. எல்லாமே மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மாற வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் ஒரு போராளியாக      (Warrior) முயற்சித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். 

மாற்றம் என்பது சாத்தியம் என்பதை நாம் உணர்ந்தாலே நல்ல விஷயங்கள் நடக்கும். கொஞ்சமும், பிடிக்காத கொடுமையான வேலையில் இருக்கிறீர்கள். புலம்பித் தள்ளுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில் ஒரு நல்ல வேலையைத் தேடி சென்று விடுவீர்கள். கெட்டதே நல்லதைக் கொண்டு வந்தது இல்லையா? 

கெட்ட விஷயங்கள் நம்மை நல்லவற்றை நோக்கி நடத்திச் செல்லும் கருவிகள் என்பதை உணருங்கள்.  மனித மூளையைப் பற்றிய ஒரு அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். அதற்கேற்ற  தீனி கிடைத்தால் அதைச் செய்துகொண்டே இருக்கும். தேவையான தீனி இல்லா விட்டால் (சும்மா இருந்தால்) பல விஷயங்கள் குறித்து கவலைப்பட ஆரம்பித்துவிடும். 

திடீரென்று வேலை ஒன்று வருகிறது. அதில் ஈடுபட நம் உடல்நிலை தயாராக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லையா அந்த எண்ணத்தையே அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அந்த  வேலையே நடக்காது என்கிறார் ஆசிரியர். 

சரி, ரொம்பவும் பிஸியாகி விட்டால் என்ன செய்வது? அவ்வப்போது அமைதி தேடிக் கொள்ள வேண்டியதுதான். ஒரு நீண்ட நடைப் பயணம், சிறிது நேர தியானம், சிறிது நேர நீச்சல், இசைக் கருவியை வாசித்தல் என ஏதாவது ஒரு விஷயத்தில் கவனத்தை திருப்ப வேண்டியதுதான்.  இது ஒன்றுமே தெரியாதே என்கிறீர்களா? ஒரு அறையில் அமைதியாக அரை நாள் இருந்து பழகுங்கள் என்கிறார் ஆசிரியர். சுய முன்னேற்றம் (Motivation) பற்றிய தவறான கருத்து ஒன்று நம்மிடத்தில் நிலவுகிறது. ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும் என்றால் முதலில் நமக்குள் அந்த எண்ணம் வேண்டும்.

முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் நிறையவும், குறைந்த அளவு செயலும் ‌இருக்கும் நபர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். வெற்றிக்குத் தேவை செயலே தவிர, வெறும் எண்ணம் மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ என்கிறார் ஆசிரியர். 

‘மனித மூளையை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று, கவலைப்படுவது (Worrier); மற்றொன்று வாரியர் (Warrior).   ஒரே ஒரு மந்திரமே மனிதனை வெற்றியையோ,  தோல்வியையோ  அடையச் செய்கிறது.  நம்மை நாம் எந்தளவுக்கு கஷ்டப் படுத்திக்கொள்கிறோமோ, அந்த அளவு வாழ்க்கை நம் மீது  மிருதுவாகச் செயல்பட்டு வெற்றி தரும். கஷ்டப்படாத மனிதர்களிடம் வாழ்க்கை எந்தக் கருணையும் காட்டாது. போராளியாக இருக்க மறுப்ப தால், அவர்களால் சொத்து எதையும் சேர்க்க முடியாது’ என்று முடிக்கிறார் ஆசிரியர். 

இந்தப் புத்தகத்தில் சொல்லும் வழிவகைகளைக் கடைப் பிடித்தால் ஒரு  போராளியாக சுலபத்தில் ஒருவர் தன்னை மாற்றிக்கொள்ளலாம்.


(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.