News
Loading...

சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை?: தந்தையின் தோளில் உயிரை விட்ட மகன்

சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை?: தந்தையின் தோளில் உயிரை விட்ட மகன்

நோய்வாய்ப்பட்ட மகனுக்கு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அந்தச் சிறுவன் தனது தந்தையின் தோளிலேயே உயிரை விட்ட பரிதாப சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை?: தந்தையின் தோளில் உயிரை விட்ட மகன்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் சுனில் குமார். இவர் தனது 12 வயது மகன் அன்ஷுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவனை கான்பூரிலுள்ள லஜ்பத் ராய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை தர மருத்துவர்கள் மறுத்ததாகவும் எப்படியாவது அங்கேயே சிகிச்சை தருமாறு அவர்களை மன்றாடிக் கேட்டுக்கொண்டும் அவர்கள் கேட்கவில்லை என்றும் சுனில் குமார் கூறினார். எனவே, வேறு வழியின்றி கால் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மகனை தோளில் சுமந்து சென்றதாகவும் ஆனால் செல்லும் வழியிலேயே அவன் இறந்துவிட்டதாகவும் சுனில் குமார் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.