News
Loading...

விமானத்தில் இருந்து ஆயில் டேங்க் கழன்று வீடுகள் மீது விழுந்தது

விமானத்தில் இருந்து ஆயில் டேங்க் கழன்று வீடுகள் மீது விழுந்தது

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான சூப்பர் சோனிக் மிக் 29 கே விமானம் விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ்.சில் இருந்து புறப்பட்டு சென்றது.

விமானத்தில் உள்ள 2 ஆயில் டேங்க்குகளை சரி பார்ப்பதற்காக விமானத்தை ஓட்டி சென்றனர்.

அப்போது ஒரு ஆயில் டேங்க் விமானத்தை விட அதிகமாக எடை இருந்ததால் அதை கடலில் விழ வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் திடீரென்று விமானத்தில் இருந்து ஆயில் டேங்க் கழன்று விசாகப்பட்டினம் சி.ஐ.எஸ்.எப். குடியிருப்பு பகுதியில் விழுந்தது. பயங்கர சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் வெளியே வந்து பார்த்தனர். தங்கள் வீட்டு முன்பு மர்ம பொருள் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர்தான் அது விமான ஆயில் டேங்க் என்பது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.