News
Loading...

விவசாயிகளின் தொடர் தற்கொலைக்கு, நாட்டில் ஒரு சிலரிடமே பணம் சேருவது முக்கியக் காரணம்

விவசாயிகளின் தொடர் தற்கொலைக்கு, நாட்டில் ஒரு சிலரிடமே பணம் சேருவது முக்கியக் காரணம்

இந்தியாவில் கலப்பில்லாத விரைவான நீதி இன்னும் தொலைதூர கனவாகவே உள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

சிம்லாவில், இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். விழாவில் பேசிய அவர், தேசம் போகும் வேகத்தில் அவசரமான உடனடி தீர்வுகளை காண  மேம்படுத்திக் கொள்வது சட்டத்துறைக்கு மிகவும் அவசியம் என்றார். 

மேலும் விவசாயிகளின் தொடர் தற்கொலைக்கு, நாட்டில் ஒரு சிலரிடமே பணம் சேருவது முக்கியக் காரணம் என்றார். குடியரசு பெற்று பல ஆண்டுகளாகியும் இன்றும் உணவு, நிரந்தர இருப்பிடத்திற்காக பலர் திண்டாடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

படித்தவர்கள், போதைப்பழக்கத்திற்கும், பெண் வன்முறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பெண்கள் பற்றிய கருத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.