News
Loading...

ஈஷாவை பற்றி சரியான புரிதல் உள்ளதா?

ஈஷாவை பற்றி சரியான புரிதல் உள்ளதா?

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு"

குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்கிறான், முடவன் நடக்கிறான் என்று கிறித்துவ மதமாற்றிகள் ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டி வெளிப்படையாக இந்துக்களை மதமாற்ற அழைப்பு விடுக்கிறார்கள்.

அந்த மூடத்தனத்துக்கு எதிராக எந்த கிறித்துவரும் பேசுவதில்லை. தேவாலயங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், சாதி வக்கிரங்கள், அதிகார அமைப்புகளின் அத்துமீறல்கள் பற்றி எந்த கிறித்துவரும் ஒரு வார்த்தையும் சொல்வதில்லை. அது எங்கள் மதவிசயம் என்று சொல்லிவிடுவார்கள்.

எந்த இஸ்லாமிய தீவிரவாதி வெடிகுண்டுகளால் மக்களை கொன்றாலும், பயங்கரவாதியாக உலாவந்தாலும் எந்த முஸ்லிமும் வாயை திறப்பது கூட கிடையாது. போதுவெளியிலே அதை நியாயப்படுத்தி பேசவும் செய்கிறார்கள்.

அப்பாவி இந்துக்களை மூளைசலவை செய்து மதமாற்றி அவர்களை கன்னியாஸ்திரி என்று சொல்லி மதமாற்ற ஆள் பிடிப்பதை யாரும் பேசுவதேயில்லை. பயங்கரவாத அமைப்புகளுக்கு, தற்கொலை படைகளுக்கு, ஐஎஸ் போன்ற அமைப்புகளுக்கு இளைஞர்களை மூளைசலவை செய்து சேர்க்கும் மதவெறியர்களை பற்றி யாரும் வாயை திறப்பதே இல்லை.

ஆனால்...
தங்கள் சுய விருப்பின் அடிப்படையில் சந்நியாசினிகளாக ஈசாவில் உள்ள பெண்களை பற்றி ஆளாளுக்கு கருத்து கூறுகிறார்கள். அதுவும் கருத்து சுதந்திரம், தனிமனித சுதந்திரம் பற்றி ஒப்பாரி வைக்கிற கூட்டங்கள்.
தன் மதத்து அயோக்கியத்தனங்களை ஆதரிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ மதவெறியர்கள் ஈஷா அமைப்பை குறை கூறுவதை புரிந்துகொள்ளலாம்.
முரசொலியையும், விடுதலை பேப்பரையும், தீக்கதிரையும் படிக்கும் யோக்கியசிகாமனிகள் கூறுவதையும் புரிந்துகொள்ளலாம்.

நக்கீரன், ஆனந்த விகடன் போன்ற உலகளாவிய முற்போக்கு பத்திரிக்களை படித்து அறிவை விருத்தியாக்கி கொண்டிருக்கும் அரைலூசு இந்துக்கள் கூறுவதை கூட புரிந்துகொள்ளலாம்.

இந்துத்துவர்கள் என்று முகநூளில் அறியப்படுகிற நீங்கள் சொல்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்து சந்நியாசிகள் பற்றி தவறாக யார் பதிவிட்டாலும் அதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் தெரியாமல் லைக்கிட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஈசா என்ன சிரியாவில் இருக்கிறதா? இல்லை அல்ஜீரியாவில் இருக்கிறதா? ஈஷாவுக்கும், ஈஷா வகுப்புகளுக்கும் நேராக சென்று பகுத்தறியலாமே? உங்களை யார் தடுக்கபோகிறார்கள்? தடுக்க முடியும்?

கிறித்துவனும், இஸ்லாமியனும் தங்கள் மத அயோக்கியத்தனங்களை பொதுவெளியில் மூர்க்கமாக ஆதரிக்கிறார்கள். இந்துக்களோ சரியாக சென்று கொண்டிருக்கும் இந்து அமைப்புகளை கூட வதந்திகளை, பொய்களை நம்பி தாக்க தொடங்குகிறார்கள்.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற அடிப்படை அறிவு கூட நமக்கில்லையா?

எந்த ஒரு இந்து சந்நியாசியும், இந்து குருவும் உலகளவில் புகழ்பெறுவதை, சமூகத்தில் இந்து பண்பாட்டு புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி காண்பதை ஆபிரகாமிய, வகாபிய தலைமைகள் விரும்பாது. அது அவர்களின் மதமாற்றத்துக்கு எதிரான விசயமல்லவா?

- fb.com/senthil.k.sakthi

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.