News
Loading...

சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் பாடப் புத்தகமானது கபிலன் வைரமுத்துவின் நாவல்

சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் பாடப் புத்தகமானது கபிலன் வைரமுத்துவின் நாவல்

கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து, எழுத்தாளரான இவர் திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதிவருகிறார். தற்போது தல 57, இந்திரஜித், சிங்கம் 3, மதியால் வெல், கஷ்மோரா உள்பட பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். இதுதவிர பூமரேங் பூமி, உயிர்ச்சொல், மெய்நிகரி என 3 நாவல்களை எழுதியுள்ளார். ஏராளமான கவிதை தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளர். கபிலன் எழுதிய மெய்நிகரி நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தில் பாடநூலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைகழகத்தின் பேராசிரியை வாசுகி கைலாசம் கூறியதாவது:

கணினி யுகத்தில் தமிழ் வெகுசன இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் கபிலன் வைரமுத்துவின் “மெய்நிகரி” நாவலை தற்காலத் தமிழிலக்கியம்' வகுப்பில் கற்பிக்கப்படுகிறது. கவனச்சிதறல் அதிகமுள்ள இக்கால இளைஞர்களிடம் இலக்கிய கற்பனைகள் தூண்டப்பட பல புதுமுயற்சிகளை இந்த நாவல் பயன்படுத்துகின்றது. மெய்நிகரியின் கதையமைப்பு நேர்க்கோட்டுத் தன்மையில்லாதது; புலம்பெயர் சூழலில் வாழும் இளையர்களுக்கு இந்த 'தமிழ்' இலக்கிய வடிவம் புதியதாக அமைந்தது;” என்கிறார் வாசுகி கைலாசம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.