News
Loading...

காவிரி நீர் மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

காவிரி நீர் மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துத் திருச்சியில் இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நடுவர்மன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை உரிய காலத்தில் திறந்து விடக் கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடக் கோரித் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்துத் திருச்சியில் இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் காவிரிப் பாசன மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.