News
Loading...

குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமை... இணையத்தில் புகார் அளிக்கும் வசதி

குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமை... இணையத்தில் புகார் அளிக்கும் வசதி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து இணையதளம் வாயிலாக புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமையை இணையத்தில் புகார் அளிக்கம் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. http:/incpcr.gov.in என்ற இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இந்த வசதி பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இந்த வசதியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தொடங்கிவைத்தார்.

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து சுலபமாகவும், நேரடியாகவும் புகார் அளிக்கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த வசதி உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Report child abuse on the internet facility to ...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.