News
Loading...

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கின்றது தமிழக விவசாயிகள் குழு!

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கின்றது தமிழக விவசாயிகள் குழு!

சம்பா சாகுபடிக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக விவசாயிகள் குழுவினர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை இன்று நேரில் சந்திக்கவுள்ளனர்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலை நிலவி வரும் நிலையில், குறுவை, தாளடி மற்றும் சம்பா என முப்போகத்தில் குறுவை, தாளடி சாகுபடி கடந்துவிட்டது. சம்பா சாகுபடிக்கு காவிரியிலிருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால், அணைகளின் போதிய தண்ணீர் இல்லை எனக் கூறி காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருகிறது.  எனவே கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதை வரவேற்றுள்ள விவசாயிகள், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை இன்று சந்திக்கவுள்ளனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.