News
Loading...

விவசாயிகள் சாலை , ரெயில் மறியல் நடத்தியும், அரசு அசைந்து கொடுக்கவில்லையே?

விவசாயிகள் சாலை , ரெயில் மறியல் நடத்தியும், அரசு அசைந்து கொடுக்கவில்லையே?

நேற்றையதினம் (30-8-2016) தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டம் நடத்தியும், தமிழக அரசு கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லையே?

தமிழக விவசாயிகள் வெற்றிகரமாக நடத்திய இந்தப் போராட்டத்தில் அனைத் துக் கட்சியினரும் இணைந்து பெரிய ஆதரவு கொடுத்துள்ளார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு, கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவோ, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சட்டமன்ற நிகழ்வு களை ஒத்தி வைக்கவோ, தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசவோ, அல்லது பிரதமரை நேரில் சந்தித்து முறையிடவோ தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள விவசாயிகள்பால் எந்த அளவுக்கு இந்த அரசுக்கு அக்கறை என்பதும், நதி நீர் உரிமை களைப் பாதுகாப்பதில் இந்த அரசுக்கு எந்த அளவுக்கு ஆர்வம் என்பதும் இதிலிருந்து தெரிகிறதல்லவா? இந்த அழகில் 100 நாள் சாதனை, வேண்டிய இதழ்களுக்கு முழுப் பக்க விளம்பரம்! உண்மையிலேயே பட்டியலிட்டால், 100 நாள் வேதனைகளைத் தொகுத்து விளம்பரம் கொடுக்க வேண்டுமென்றால், நான்கு பக்க விளம்பரம்தான் கொடுக்க வேண்டும்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.