News
Loading...

பசு பாதுகாப்பு தலைவர் பஞ்சாபில் கைது

பசு பாதுகாப்பு தலைவர் பஞ்சாபில் கைது

பசு பாதுகாப்பு என்ற பெயரில், சிலரை அடித்து துன்புறுத்திய வழக்கில், பசு பாதுகாப்பு அமைப்பு தலைவர் சதீஷ் குமாரை, பஞ்சாப் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில், அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் பாட்டியாலா நகரில், சமீபத்தில், பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில், பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தோர், சிலரை அடித்து துன்புறுத்தினர்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாகவும், சிலரை கடத்திச் சென்றதாக கூறப்படும் புகாரின் அடிப்படையிலும், பசு பாதுகாப்பு அமைப்பு தலைவர் சதீஷ் குமாருக்கு எதிராக, பாட்டியாலா நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசாரிடம் பிடிபடாமல், சதீஷ் குமார் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், பாட்டியாலா நகர போலீசார், சதீஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.