News
Loading...

நடிகர் விஷால் பிறந்தநாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

நடிகர் விஷால் பிறந்தநாள் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

நடிகர் விஷாலுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மகளிர் அணி சார்பில் மகளிர் அணி தலைவி மஞ்சுளா தலைமையில் மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதை நடிகர் விஷால் துவக்கி வைத்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட புரட்சி தளபதி விஷால் இளைஞர் அணி சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவை துவக்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்ப்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ப.கண்ணன் செய்திருந்தார். 

இந்த பிறந்தநாள் விழாக்கள் அனைத்தையும் மேலாளர் எம்.எஸ். முருகராஜ், புரட்சி தளபதி விஷால் ரசிகர் நற்பணி மன்ற மாநில தலைவர் சி. ஜெயசீலன், செயலாளர் ஹரி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
        
மேலும், நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் எம்.பி.எஸ்., பாலி கிளினிக் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை நடிகர் விஷால் கலந்து கொண்டு நேற்று துவக்கி வைத்தார்

அப்போது விஷால் பேசும்போது, இது குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறேன். இது மிகச்சிறந்த மருத்துவ முகாமாகும் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அழைத்து வருமாறு கேட்டு கொள்கிறேன் என்றார் விஷால்.

மேலும், அந்த மருத்துவ முகாமில் ஒரு குழந்தைக்கு விஷால், தேவி என பெயரிட்டார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.