News
Loading...

சீனாவின் பறக்கும் பஸ்

சீனாவின் பறக்கும் பஸ்

பறக்கும் ரயிலையே நாம் இன்னும் அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, விரைவில் சீனாவின் சாலைகளில் பறக்கும் பஸ் ஓடப்போகிறது. சீனாவில் வாகனங்களின் உபயோகம் அதிகமானதால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது. மக்களுக்குப் பயன்படும் விதமாய் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து வருமானத்தையும் பெருக்கும் டூ இன் ஒன் ஐடியாதான் இந்தப் பறக்கும் பஸ். Transit Elevated Bus எனப்படும் இந்த `3D எக்ஸ்பிரஸ் பஸ்' ஐடியா 2010-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற `ஹை-டெக் எக்ஸ்போ'வில் முன்வைக்கப்பட்டது. 

சீனர்கள் தம் மூளையை பிரிச்சுப்போட்டு யோசிச்சு இந்த டெக்னிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேருக்கு நேரே போய் முட்டினால்தானே விபத்து நடக்கும்? பஸ்ஸே ரோட்டில் இரண்டு ப்ளாட்ஃபாரத்தை மட்டும் தொட்டுகிட்டுப் போகும். ஜாலியா இருக்குல்ல? காரோ பைக்கோ இனி சைடு வாங்கிப் போகத் தேவை இல்லை. `சின்னத்தம்பி' கவுண்டமணி போல நடுவால புகுந்து போகலாம். சுரங்கப்பாதை ஃபீல்தான் கிடைக்கும். அதுக்கு வசதியா பஸ்ஸோட பேஸ் மட்டம் ஏழு அடி உயரத்தில் இருக்கு.  இதனால் இந்த பஸ் பயணிக்கத் தனியாக சாலை தேவையில்லை. கார்கள் சென்றுகொண்டிருக்கும்போது அதற்குச் சற்று மேலேயே தவழ்ந்து செல்லும்.

சீனாவின் பறக்கும் பஸ்

இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்து ட்ராஃபிக் ஜாமைக் கட்டுப்படுத்திட லாம் என சீன அரசு முழுவீச்சில் இறங்கியபோது ஒரு விஞ்ஞானி மட்டும், `ஆமா... குறுக்கால லாரி வந்தா இன்னா பண்ணுவீங்கோ?' என பொசுக்குனு ஒரு கேள்வியைக் கேட்டார். ஆடிப்போன அரசாங்கம்,  `அட ஆமால்ல..!' என அதற்கும் ஒரு ப்ளானைப் போட்டு `இந்த வகை பஸ்ஸுகள் பயணிப்பதற்கென அமைக்கப்பட்ட பிரத்யேகமான சாலைகளில் பெரிய வாகனங்கள் செல்லாது' என விளக்கம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்தக்கட்டுரையை நீங்கள் படிக்கும்போது இந்தப் பேருந்தின் சோதனை ஓட்டம் 300 பயணிகளோடு நடைபெற்று இருக்கும். இதற்கு ஆகும் செலவு சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கு ஆகும் செலவில் ஐந்தில் ஒரு பங்குதானாம். 

நம் ஊரில் பறக்கும் குதிரையே வந்துருச்சு. பறக்கும் பஸ்ஸில் நாம் பயணிக்கும் தூரம் தொலைவில் இல்லை. வாழ்த்துங்கள் ப்ரெண்ட்ச்..!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.