News
Loading...

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சவக் குழிக்குப் போய் வெகு காலம் ஆகிவிட்டது!

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சவக் குழிக்குப் போய் வெகு காலம் ஆகிவிட்டது!

ATM -ல் பணம் நிரப்ப வந்த வாகனமே கடத்தப்பட்டு, அதில் கொண்டு வரப்பட்ட பணம் கொள்ளை

அந்த அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு "ரெக்கை" கட்டிப் பறக்கிறது. சொன்னால், இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அப்படியே பாதுகாக்கப்படுவதாகச் சொல்வார்கள். ஆனால் வெட்கக்கேடு! கன்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் கொண்டு போன கதை! அமைச்சருக்கு வேண்டிய அன்புநாதன் வீட்டில் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட தொகை! இது போதா தென்று ஓடும் ரெயிலில் ஓட்டை போட்டுக் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கப் பட்டது! நெய்வேலியில் சுரங்கமே அமைத்துக் கொள்ளை! இவையெல்லாம் போதாதென்று தான் நேற்று ஏ.டி.எம். இல் பணம் நிரப்புவதற்காக இலட்சக்கணக்கான ரூபாயுடன் சென்ற வாகனமே கடத்தப்பட்டு, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 

பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் புகை வண்டி நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய தாய், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டுமென்றும், தன் மகன் தவறாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்குத் தொடுத்து, அதன் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சோனாலி என்ற மாணவி வகுப்பறைக்குள் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். திருப்பெரும்புதூர் அருகே, திவ்யா என்ற இளம்பெண் பட்டப் பகலில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட் டிருக்கிறார். இவைதான் சட்டம், ஒழுங்கு இந்த ஆட்சியிலே பாதுகாக்கப்படும் இலட்சணம்! அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சவக் குழிக்குப் போய் வெகு காலம் ஆகிவிட்டது!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.