News
Loading...

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தின்படி ஆசைக்கு இணங்க கோருவதும் ஊழல்தான்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தின்படி ஆசைக்கு இணங்க கோருவதும் ஊழல்தான்

நாட்டில் ஊழலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய ஊழல் தடுப்பு திருத்த சட்டம் குறித்து மத்திய சட்ட ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்ற மாநிலங்களவை ஆய்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இக்குழு மத்திய சட்ட ஆணை யத்தின் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி தனது பரிந்துரையை சமீபத்தில் சமர்ப்பித்தது. இதில், பொது ஊழியர் ஒருவர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வ வேலைக்கு, சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தை தவிர வேறு எந்த வகையிலும் அனுகூலம் பெறுவது ஊழலாக கருதப்பட வேண்டும். இதில் பாலியல் உறவுக்கு அழைப்பதையும் ஊழலாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குற்றத்துக்கு அதிகப்பட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக இந்த சட்டத் திருத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களையும், அதன் நிர்வாக அதிகாரிகளையும் கூட சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்ற ஆய்வுக் குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் லஞ்சம் பெறுபவர் மட்டுமன்றி லஞ்சம் கொடுப்பவரையும் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.