News
Loading...

சாலை விரிவாக்கத்தில் நூதனம் : வேருடன் இடம் மாறும் மரங்கள்

சாலை விரிவாக்கத்தில் நூதனம் : வேருடன் இடம் மாறும் மரங்கள்

கோபி அருகே சாலை விரிவாக்கத்திற்காக, இடையூறாக இருந்த புளிய மரங்கள், வேருடன் இடமாற்றம் செய்வது நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டம், கோபி - குன்னத்துார் சாலையில், 12வது கி.மீ., துாரத்தில், 'எஸ்' வடிவில் உள்ள சாலையில், அடிக்கடி சாலை விபத்து நடந்தது. சாலையை விரிவாக்கம் செய்ய இடையூறாக இருக்கும் மரங்களை வெட்டி வீசாமல், வேருடன் தோண்டி, இடமாற்றம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

இடமாற்றம் செய்ய தகுதியான, 33 புளிய மரங்களை வேருடன் தோண்டி, மீண்டும் உயிர்கொடுக்க முடிவானது. வேருடன் பறிக்க முடிவு செய்த மரங்களை, எளிதாக அகற்றும் வகையில், சுற்றிலும் குழி தோண்டி, கடந்த சில நாட்களாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் வேருடன் தோண்டி, வேறிடத்தில் நடும் பணி, நேற்று தொடங்கியது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதன் பின், சாலை விரிவாக்க பணி தொடங்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.