News
Loading...

தங்க மகள்களுக்கு BMW கார் பரிசளித்த சச்சின்!

தங்க மகள்களுக்கு BMW கார் பரிசளித்த சச்சின்!

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த வீராங்கனைகளான சிந்து, சாக்சி மாலிக், தீபா கர்மாக்கர் ஆகியோருக்கு ஐதராபாத்தில் இன்று காலை பாராட்டு விழா நடந்தது.

இந்த பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சாதனை படைத்த வீராங்கனைகளை பாராட்டி சச்சின் பேசினார். இந்நிகழ்ச்சியில் தான் ஏற்கனவே அறிவித்தபடி, பிஎம்டபிள்யூ சொகுசு காரை, ஒலிம்பிக்கில் சாதனை படைத்த சிந்து, சாக்ஷி, தீபா கர்மாகர் ஆகியோருக்கு பரிசளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய தீபா, தங்களுக்கு ஆதரவு தெரிவித்த சச்சினுக்கு நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்திற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் பேசிய சாக்சி, சச்சின் தனது சகோதரர் எனவும், தான் அவரது மிகப் பெரிய ரசிகை எனவும் கூறினார். அவருடன் குடும்ப போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனால் தீபா, சாக்சி,சிந்து, கோபிசந்த் ஆகியோருடன் சச்சின் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.