News
Loading...

சர்வதேச போட்டியில் பங்கேற்க சீன வீரர்களுக்கு ஓராண்டு தடை

சர்வதேச போட்டியில் பங்கேற்க சீன வீரர்களுக்கு ஓராண்டு தடை

சர்வதேச பளுதூக்குதல் போட்டிகளில் பங்கேற்க சீனாவை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது.

சீனாவை சேர்ந்த பளுதூக்குதல் வீரர்-வீராங்கனைகள் தொடர்ந்து ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2008-ஆம் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்ற சீன வீரர்-வீராங்கனைகளின் இரத்த மாதிரி மூன்றாவது முறையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், அவர்கள் ஊக்க மருந்து உட்கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தடை நடவடிக்கையை அறிவித்துள்ளது. 2000-ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் சீன அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரியோ ஒலிம்பிக்கிலும் சீனா அணி 5 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த பளுதூக்குதல் வீரர்-வீராங்கனைகள் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையால் ரஷ்யா, அசர்பைஜான், பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த பளுதூக்குதல் வீரர்-வீராங்கனைகளுக்கு ஏற்கனவே ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

English Summary : Chinese athletes to participate in international competition for the one-year doping ban controversy ...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.