
பேஸ்புக்கின் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் நிறுவனம், மாறிய பின்னர் முதன் முறையாக தனது பிரைவசி பாலிசியை அது மாற்றியுள்ளது. பேஸ்புக்கில் விளம்பரத்தை அதிகப்படுத்தும் வகையில் இந்த மாற்றத்தை வாட்ஸ் அப் நிறுவனம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் ஆப்பை டவுன்லோட் செய்து ஸ்மார்ட் போன்களில் வைத்துக் கொண்டு நமது நட்பு வட்டங்களோடு சாட் செய்யலாம். அதே போன்று பேஸ்புக்கில் கணக்கு ஒன்றை தொடங்கி வைத்துக் கொண்டு நமது நட்புகளோடு அமர்களம் பண்ணலாம். தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருந்த இவை இரண்டும் இனி சேர்ந்து செயல்பட போகிறது.
வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் இந்த 2 ஆப்களும் இனி ஒன்றிணைந்து செயல்பட போகிறது என்று வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, வாட்ஸ் அப்பில் உள்ள செல்போன் நம்பர்கள் இனி பேஸ்புக்குடன் இணைக்கப்படும்.
இதுகுறித்து, வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, வாட்ஸ் அப்பில் கணக்கு வைத்திருக்கும் செல்போன் நம்பரும் அதே போனில் இருக்கும் பேஸ்புக் கணக்கோடு இணைக்கப்படும். அப்படி இணைக்கும் போது, பேஸ்புக்கில் உங்களோடு நட்பாக இல்லாதவர்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவருக்கு பேஸ்புக்கில் இருந்து நட்புக்கான அழைப்பு விடுக்கப்படும். இதன் மூலம் உங்கள் நட்பை சமூக வலைத்தளங்களில் அதிகரித்துக் கொள்ளலாம். அதே போன்று தகாத செய்திகள் ஏதாவது பேஸ்புக் மூலம் உங்களுக்கு அனுப்பினால் அந்த கணக்கு யாருடையது என்பதை வாட்ஸ் அப் எண் மூலம் கண்டுபிடிக்க முடியும். மேலும் அந்த கணக்கை பேஸ்புக்கில் இருந்து முடக்கவும் முடியும்.
பின்னர் மிக முக்கியமானது விளம்பரம்தான். வாட்ஸ்அப் செல்நம்பர்களை பேஸ்புக்குடன் இணைக்கும் போது, விளம்பரத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறது வாட்ஸ் அப் நிறுவனம்.
வாட்ஸ் அப் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியில் மாற்றம் செய்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்ணை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்ற ஆப்ஷனை தெரிவு செய்துவிட்டால் அந்த செல்போன் எண் பேஸ்புக்குடன் இணைக்கப்பட மாட்டாது. இதற்கான அறிவிப்புகள் வாட்ஸ் அப் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். உங்களுடைய விவரங்களை பகிரலாமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும், எந்தக் காரணத்தை கொண்டும் செல்போன் நம்பர்கள் பேஸ்புக்கில் ஷேர் செய்யவோ, மூன்றாம் நபருக்கு கொடுக்கவோ, ஏதாவது செய்திகள் அனுப்பப்படவோ மாட்டாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Summary : whatsapp is going share your number with facebook new policy
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.