News
Loading...

'ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் வழிபடலாம்'... உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் வழிபடலாம்'... உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பையில் ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் வழிபடலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழிபடச் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் மகாராஷ்டிர மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.

தர்காவுக்குள் பெண்கள் வழிபடுவதை தடுப்பது அரசியல் சட்டம் தனி மனிதனுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். மும்பையிலுள்ள ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் சென்று வழிபட கடந்த 2012ம் ஆண்டு தர்கா நிர்வாகம் தடை விதித்திருந்தது. மத விதிமுறைகளை இதற்கு காரணமாக தர்கா நிர்வாகம் கூறியிருந்தது.

இதையடுத்து பெண் சமூக செயற்பாட்டாளர்கள் இருவரும் பாரதிய முஸ்லிம் மஹிளா‌ ஆந்தோலன் என்ற அமைப்பும் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இதற்கிடையில் ஹாஜி அலி தர்கா நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று 6 வார காலத்திற்கு இத்தீர்ப்பை நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English Summary : Haji Ali dargah must allow women to enter the inner sanctum: Bombay high court

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.