News
Loading...

சென்னை மாநகரில் கூடுதலாக 100 மினி பஸ் இயக்கப்படும்

சென்னை மாநகரில் கூடுதலாக 100 மினி பஸ் இயக்கப்படும்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: 

* சென்னை மாநகரில் தற்போது மாநகர் போக்குவரத்து கழகத்தால் 200 சிற்றுந்துகள்(மினிபஸ்)   இயக்கப்பட்டு வருகின்
றன.  போக்குவரத்து வசதிகள் இல்லாத இடங்களை அருகில் உள்ள போக்குவரத்து முனையங்களுடன் இந்த சிற்றுந்துகள் இணைக்கின்றன.  சென்னை மாநகரில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இந்த ஆண்டு இயக்கப்படும். 

* அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில் ஒரு போக்குவரத்துக் கழகத்தில் 200 பணியிடங்கள் என்ற வீதத்தில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 1,600 பணியிடங்கள் கருணை அடிப்படையில் நிரப்பப்படும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.