News
Loading...

திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடியில் ரூ.1000 கோடி ஊழல்

திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடியில் ரூ.1000 கோடி ஊழல்

திருச்சியில் தேசிய தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், 1970ல் வங்கி, அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.150. தற்போது ரூ.66 ஆயிரமாகும். எம்எல்ஏ சம்பளம் ரூ.250ல் இருந்து தற்போது ரூ.55ஆயிரம். ஒரு பவுன் தங்கம் விலை ரூ.120ல் இருந்து தற்போது ரூ.23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 1970ல் 60 கிலோ நெல் விலை ரூ.40. தற்போது ரூ.880. 1970ல் ஒரு டன் கரும்பு விலை ரூ.80. தற்போது ரூ.2,300. அரசு ஊழியர் சம்பளம் உயர்வு போல நெல்லுக்கு கொடுத்தால் நெல்லுக்கு தர வேண்டிய பணம் ரூ.17,600. அரசு ஊழியர் சம்பள உயர்வு போல் கரும்புக்கு கொடுத்தால் தரவேண்டிய விலை ரூ.35,200. இதனால் தான் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடிய வில்லை.

 விவசாயிகள் வாங்கிய ரூ.5,800 கோடி கடனில் திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவு ஊழியர்கள், இறந்த விவசாயிகளின் கையெழுத்தை போட்டு, தாங்களே எடுத்து கொண்ட தொகை ரூ.1000 கோடிக்கு மேல் இருக்கும். கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளின் பெயரை மட்டும் விளம்பர பலகைகளில் போடாமல் முழு விலாசத்தையும் போட்டால் மோசடி திருட்டை கண்டு பிடித்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...