News
Loading...

கவர்னருக்கு ரூ.100 லஞ்சம் அனுப்பிய விவசாயி

கவர்னருக்கு ரூ.100 லஞ்சம் அனுப்பிய விவசாயி

அரசின் சலுகைகள் பெற லஞ்சம் கேட்டு அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து  கவர்னருக்கு விவசாயி ஒருவர் ரூ. 100 அனுப்பியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வடசிறுவளூர் கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி நாராயணசாமி(58), பல ஆண்டுகளாக பயிர் கடன், வங்கி கடன், பசுமை வீடு, நூறு நாள் வேலை கேட்டு திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் என மனு கொடுத்தார். எந்த பலனும் கிடைக்கவில்லை. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு  தீ சட்டி ஏந்தி வந்து, வட்டாட்சியர் மதியழகனிடம் மனு கொடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார். ஆனால் நடவடிக்கை இல்லை. 

இந்நிலையில், தமிழக கவர்னருக்கு  மனு ஒன்றை நாராயணசாமி அனுப்பியுள்ளார். அதில் தன்னுடைய கோரிக்கைகள், நிறைவேற லஞ்சம் கேட்கிறார்கள். என்னால் நூறு ரூபாய் தான் லஞ்சமாக கொடுக்க முடியும். எனவே, நான் அனுப்பியுள்ள நூறு ரூபாயை பெற்றுக்கொண்டு,  அதை தமிழக நிர்வாகத்திற்கு வழங்கி எனக்கு வேண்டிய சலுகைகளை பெற்று தரும்படி கேட்டு கொள்கிறேன்  என கூறியுள்ளார்.  

மனுவுடன் பாரத ஸ்டேட் வங்கியில், நூறு ரூபாய்க்கு கவர்னர் பெயரில்  டிடி எடுத்து நேற்று முன்தினம் கவர்னருக்கு  அனுப்பியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...