News
Loading...

பெங்களூருவில் காலை 11 மணியில் இருந்து இதுவரை 90க்கும் மேற்பட்ட பேருந்து, லாரிகள் எரிப்பு

பெங்களூருவில் காலை 11 மணியில் இருந்து இதுவரை 90க்கும் மேற்பட்ட பேருந்து, லாரிகள் எரிப்பு

சென்னை: பெங்களூருவில் காலை 11 மணியில் இருந்து இதுவரை 90க்கும் மேற்பட்ட பேருந்து, லாரிகள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட லாரி, பேருந்துகளை தேடித் தேடி வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.  

மைசூர் சாலையில் உள்ள லாரி நிறுத்தமிடத்தில் 27 லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 27 லாரிகளும் சரக்குகளுடன் எரிந்து நாசமாகின. லாரிகள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்ததால் ஒன்றுக்கு வைக்கப்பட்ட தீ அனைத்து லாரிகளும் பரவியது. 

மேலும் கே.பி.என் நிறுவனத்துக்கு சொந்தமான டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 50 பேருந்துகள் எரிக்கப்பட்டன. பணிமனைக்குள் புகுந்த கன்னட அமைப்பினர் பேருந்துகளுக்கு தீ வைத்தனர். கே.பி.என் டிப்போவில் நெருப்புக்கு தப்பிய 20 பேருந்துகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கே.பி.என் நிறுவனத்தின் ஒவ்வொரு பேருந்தும் சொகுசு பேருந்து ஆகும். சேலத்தை மையமாக கொண்டு கே.பி.என் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் உச்சகட்ட பதற்றம்

பெங்களூருவில் பேருந்துகள், லாரிகள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டதால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்துக் கொண்டிருப்பதால் பெங்களூரு முழுவதும் சைரன் சத்தம் கேட்கப்பட்டு வருகிறது. 

போலீசின் கட்டுப்பாட்டில் இல்லாத சட்டம்-ஒழுங்கு 

பெங்களூரு நகர சட்டம்-ஒழுங்கு போலீசின் கட்டுப்பாட்டில் இல்லாததால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சட்டம்-ஒழுங்கு காப்பதே மாநில அரசின் கடமை என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருந்தது. உச்சநீதிமன்றம் எச்சரிக்கையையும் மீறி சட்டம்-ஒழுங்கை காக்க கர்நாடக அரசு தவறி உள்ளது. 

பெங்களூருவில் காலை 11 மணியில் இருந்து இதுவரை 90க்கும் மேற்பட்ட பேருந்து, லாரிகள் எரிப்பு

பெங்களூருவில் காலை 11 மணியில் இருந்து இதுவரை 90க்கும் மேற்பட்ட பேருந்து, லாரிகள் எரிப்பு

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...