News
Loading...

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு

பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு

பெங்களூரு: காவிரி விவகாரத்தில் இருமாநில மக்களும் அமைதிகாக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை உரிய  நடவடிக்கை எடுத்து வருவதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினைக்காக யாரும் போராட்டம் நடத்த வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்திலும் வன்முறை நிகழாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். 

கர்நாடகா நாளை ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக அமைச்சரவை ஆலோசனை நடத்தும் என்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து கர்நாடக அமைச்சரவை நாளை ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமைதியை நிலைநாட்ட பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவை  போலீஸ் பிறப்பித்துள்ளது. தமிழர்கள், தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதை தடுக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு

மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

காவிரி விவகாரத்தால் பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து 20-ம் தேதி வரை தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

பெங்களூருவில் தடியடி

பெங்களூருவில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய கன்னட அமைப்பினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...