News
Loading...

#வீடியோ: ஆச்சரியப்படுத்தும் 18 மாத அதிசய #குழந்தை!


26 நாடுகளின் கரன்சிகள் மற்றும் ஏழு அதிசயங்களை அடையாளம் காட்டி ஆச்சரியப்படுத்தி வருகிறார் நாக்பூரைச் சேர்ந்த 18 மாத பெண் குழந்தையான ஆத்விகா பேல்.

நாக்பூரைச் சேர்ந்த 18 மாத பெண் குழந்தையான ஆத்விகா பேல்,26 நாடுகளின் கரன்சிகளை தெரிந்து வைத்துள்ளது மட்டுமின்றி,ஏழு உலக அதிசயங்களையும் அவை அமைந்துள்ள நாடுகளையும் அடையாளம் காட்டி அசத்தி வருகிறார்.இதுமட்டுமல்லாது ஆங்கிலத்தில் உள்ள விலங்குகளின் பெயரை மராத்தி மொழியில் மொழி பெயர்த்தும் சொல்கிறார்.

தனது மகள் ஆறு மாதத்திலேயே எல்லா விஷயங்களையும் கவனிக்கத் தொடங்கிவிட்டதாகவும்,ஆத்விகா தவழத் தொடங்கிய போதே ஆங்கில எழுத்துகள்,பழங்கள் ஆகியவற்றின் படங்களை காட்டி,அவை குறித்து கற்றுக் கொடுக்க தொடங்கியதாகவும் அவளது தாய் அஸ்வாரி பேல் தெரிவித்துள்ளார்.

எட்டு மாதத்தில் நாடுகளின் கரன்சிகளை கற்றுக் கொண்ட ஆத்விகா,பத்து மாதத்தில் உடலின் பாகங்களை அடையாளம் காணவும் கற்றுக் கொண்டாராம்.டைம்ஸ் ஆப் இந்திய நிருபர் இரண்டு மணி நேரம் செலவிட்டு,சுமார் 100 கேள்விகளை ஆத்விகாவிடம் கேட்டுள்ளார்.அவருடைய கேள்வி அனைத்திற்கும் சிறு தவறு கூட இன்றி ஆத்விகா பதிலளித்துள்ளார்.

தனது மகளுக்கு புத்தகங்களை பார்ப்பதில்தான் அதிக விருப்பம் எனவும் அவளுக்கு எப்போதுமே அறிவுப்பசிதான் என ஆத்விகாவின் தாய் பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...