News
Loading...

செல்ஃபி எடுத்த போது விபரீதம்: அணையில் மூழ்கி பலி


"ராணுவத்தால அழிஞ்சவனவிட செல்ஃபியால அழிஞ்சவன் தான் அதிகம்"னு விஜய் பஞ்ச் டையலக் பேசினாலும் ஆச்சிரியமில்லை. அந்தஅளவுக்கு செல்ஃபி மோகத்தால் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ளது பிந்துசாரா அணை. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக அணையில் நீர் நிரம்பி வழிந்துள்ளது. இந்நிலையில், காசிக் ஷேக் (20), அக்தர் ஷேக் ஆகியோர் நண்பர்களுடன் அணையில் நிரம்பி வழியும் அலகை காண சென்றுள்ளனர்.

அப்போது, காசி ஷேக் மற்றும் அக்தர் ஷேக் ஆகியோர் அணையின் விளிம்பில் இருந்த படியே செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக கால் வழுக்கி இருவரும் அணையில் மூழ்கினர். இதில் அக்தர் மட்டும் உள்ளூர் வாசிகளால் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு காசிக் ஷேக்கின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.