News
Loading...

ரூ.22,086 கோடியில் தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டம்

ரூ.22,086 கோடியில் தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டம்

ஆட்டோ டிரைவர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு இஎஸ்ஐ, கட்டிட தொழிலாளர்களுக்கு பிஎப் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர்  பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். புவனேஸ்வரில் தேசிய தொழிலாளர் கருத்தரங்கை தொடங்கி வைத்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு  தத்தாத்ரேயா கூறியதாவது: 

கட்டுமான செஸ் வரியை மாநிலங்கள் வசூலிக்கின்றன. கட்டுமான உரிமையாளர்களிடம் இருந்து செஸ்வரியாக ரூ.27,886 கோடியை  மாநிலங்கள் பெறுகின்றன. ஆனால் இவற்றில் வெறும் ரூ.5,800 கோடியை மட்டும்தான் கட்டுமான தொழிலாளர் நலனுக்காக செலவிடுகின்றன. கட்டுமான தொழில்  மூலம் வரி வருவாய் மிக அதிக அளவில் வந்தாலும், இத்துறை தொழிலாளர்களை மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.

அதாவது, சுமார் ரூ.22,086 கோடி, மாநில அரசு கருவூலங்களில் பயனற்று கிடக்கிறது.  கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர் சட்டத்தின்படி இந்த நிதியை  தொழிலாளர்களுக்கு பயன்படுத்த வேண்டும். உதாரணமாக ஒடிசா அரசுக்கு கட்டுமான துறை மூலம் வரியாக ரூ.940 கோடி கிடைக்கிறது. ஆனால் கட்டிட  தொழிலாளர்களுக்கு அந்த அரசு செலவு செய்வது ரூ.120 கோடிதான். இந்த பணத்தை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு செலவிடுவதாகவே தோன்றுகிறது. 

செஸ் வரியை கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் கல்வி, படிப்பு,திறன் மேம்பாடு, பென்ஷன் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு  கண்டிப்பாக செலவிட வேண்டும். இத்துறையில் தொழிலாளர் நலனுக்காக செலவிடப்படாத நிதி குறித்து உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது. தொழிலாளர்  நலனுக்காக 44 சட்டங்கள் இருக்கின்றன. இவற்றை முறைப்படி அமல்படுத்த வேண்டும். 

கட்டுமான தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோல், ஆட்டோ, ஆட்டோரிக்‌ஷா, அங்கன்வாடி  ஊழியர்களுக்கு இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவை படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இவ்வாறு பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.