News
Loading...

25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் 2 ஏட்டுக்கள் கைது

25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் 2 ஏட்டுக்கள் கைது

25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் 2 ஏட்டுக்கள் ஜெயிலில் அடைப்பு, நூதனமாக பிடித்துக் கொடுத்த ரமேஷ்

உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் நீங்களும் இப்படி செய்யலாம் 

3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் - ஏட்டு 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

கலசபாக்கம் அடுத்த பாணாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு சொந்தமாக டிராக்டர் மற்றும் கிணற்றை ஆழமாக்க பயன்படுத்தும் தோட்டா வாகனம் (வெடிவைக்கும் வண்டி) உள்பட பல்வேறு வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை அண்ணாமலையின் மகன் ரமேஷ் (வயது 45) நிர்வகித்து வருகிறார்.

அண்ணாமலையின் தோட்டா வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் குமார் (35) ஓட்டிவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாகனத்தை குமார் ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

அதனை கடலாடி போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் உரிமையாளர் அண்ணாமலை, டிரைவர் குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரமேஷ் வீட்டில் வெடிபொருள் உள்ளதா? என கடலாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜன் திடீரென சோதனை நடத்தினார். அப்போது ரமேஷிடம் ‘‘தோட்டா வாகனத்துக்கு வெடிபொருள் பயன்படுத்துவது தொடர்பாக உன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும்’’ என்று கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் சப்-இன்ஸ்பெக்டர் பேசியதை ஆடியோவில் பதிவு செய்ய முடிவு செய்தார்.

செல்போனில் சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜனை தொடர்பு கொண்டு பணம் கொடுப்பது தொடர்பாக பேசி உள்ளார். அப்போது நடந்த உரையாடலை தனது செல்போனில் ரமேஷ் பதிவு செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரமேஷ் தகவல் தெரிவித்தார்.

அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜனையும், போலீசாரையும் பிடிக்க திட்டமிட்டனர். ரமேஷிடம் முதலில் ரூ.3 ஆயிரம் முன்பணமாக தருவதாக போலீசாரிடம் கூறும்படி கூறினார்கள். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜனை தொடர்பு கொண்டு முன்பணமாக ரூ.3 ஆயிரம் தருவதாக செல்போன் மூலம் ரமேஷ் கூறினார்.

அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜன் பணத்தை கடலாடி போலீஸ் நிலையம் கொண்டு வரும்படி கூறி உள்ளார்.

இதனையடுத்து நேற்று மதியம் லஞ்சஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.3 ஆயிரத்துடன் கடலாடி போலீஸ் நிலையத்துக்கு ரமேஷ் சென்றார். அவரை பார்த்தவுடன் சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜன், பணத்தை தனிப்பிரிவு ஏட்டு ஏழுமலையிடம் கொடுக்கும்படி கூறி உள்ளார். அதன்படி ரமேஷ் பணத்தை ஏட்டு ஏழுமலையிடம் கொடுத்தார்.

அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்பட 10 பேர் அடங்கிய போலீசார் அதிரடியாக கடலாடி போலீஸ் நிலையத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளில் ரூ.2 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜனும், ஏட்டு ஏழுமலை ரூ.ஆயிரமும் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.