News
Loading...

இந்த வார ராசிபலன் 25-9-2016 முதல் 01-10-2016 வரை

இந்த வார ராசிபலன் 25-9-2016 முதல் 01-10-2016 வரை

இந்த வார ராசிபலன் 25-9-2016 முதல் 01-10-2016 வரை

கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி.

மேஷம்:
பொது: சூரியன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். நல்ல தகவல் வந்து சேரும். நல்லவர்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு நல்லவர் அல்லாதவர்களிடமிருந்து விலகுவது அவசியமாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. குருவுக்கும் சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது அவசியம்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு கடினம். கொடுக்கல்-வாங்கலில் அதிக கவனம் தேவை. முக்கியத்தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட நேரலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலனில் அக்கறை தேவை. வேலையாட்களால் பிரச்னைகள் ஏற்படும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் ஓரளவு பயன்படும். பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்.

தொழில்: அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகிகள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு நிலவிவரும். தகவல் தொடர்பு இனங்கள் ஓரளவு லாபம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் வருவாய் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றம் காணத் தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

மாதர்களுக்கு: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு: படிப்பில் அதிக கவனம் தேவை. சோர்வுக்கும் சோம்பலுக்கும் இடம் தரலாகாது.

பணம் வரும் தேதிகள்: செப்டம்பர் 30, அக்.1.


ரிஷபம்:
பொது: புதன், குரு, கேது ஆகியோர் அனுகூலமான நிலையில் உலவுகிறார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. அலைச்சல் கூடும். உடல் நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. குருபலம் இருப்பதால் தெய்வ பலம் பக்கபலமாக இருக்கும் என்பதால் சமாளிப்பீர்கள்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். மக்களால் நலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் பிரச்னைகள் சூழும். கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள்.

நிலபுலங்கள்: சொத்துக்களால் ஓரளவு வருவாய் கிடைத்துவரும். செவ்வாய் 8-ல் இருப்பதால் சொத்து சம்பந்தமான சில இடர்ப்பாடுகளும் ஏற்படும். முருகனை வழிபடுவது நல்லது.

தொழில்: வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு சம்பந்தமான துறைகளைச் சேர்ந்தவர்கள் செழிப்பான பாதையைக் காண்பார்கள். கலைஞர்கள், இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள், கட்டடப்பணியாளர்கள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: எதிர்ப்புக்கள் இருக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும்.
மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும்.

பணம் வரும் தேதிகள் : செப்டம்பர் 25, 30.


மிதுனம்:
பொது: சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். எதிர்ப்புக்கள் இருக்கும் என்றாலும் சமாளிப்பீர்கள். வாரப் பின்பகுதியில் முக்கியமானதொரு காரியம் இனிது நிறைவேறும். திருமாலை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: வார முன்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். பெண் குழந்தைகளால் அனுகூலம் ஏற்படும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும்.

நிலபுலங்கள்: ஓரளவு பயன்படும். திருமாலை வழிபட்ட பின்பு சொத்து சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவது நல்லது.

தொழில்: வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத்திரவியங்கள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
மாதர்களுக்கு: மன உற்சாகம் பெருகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும்.


மாணவர்களுக்கு: புதனும் கேதுவும் அனுகூலமாக உலவாததால் படிப்பில் அதிக கவனம் தேவை. ஹயக்ரீவரை வழிபடுவது நல்லது.


பணம் வரும் தேதிகள்: செப்டம்பர் 25, 26, 27 (பகல்).


கடகம்:
பொது: சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரது நிலை சிறப்பாக உள்ளது. மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். ராகு, கேது, குரு, சனி ஆகியோர் அனுகூலமாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகளும் அவ்வப்போது ஏற்படும். வீண்விவகாரங்களில் தலையிடலாகாது. சுப காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கவனம் தேவை. குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பணப் பிரச்னை ஏற்படும். குடும்பத்தில் அந்நியரின் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. புதிய துறைகளில் அதிக முதலீடு செய்யலாகாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவராலும், தந்தையாலும் அனுகூலம் உண்டாகும்.

நிலபுலங்கள்: 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் இருப்பதால் புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்புக் கூடிவரும்.

தொழில்: கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். வியாபாரம் பெருகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். இயந்திரப்பணியாளர்களுக்கும் இன் ஜினீயர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். ஜலப்பொருள் லாபம் தரும். தகவல் தொடர்பு இனங்கள் மூலம் வருவாய் கிடைக்கும். ஆன்மிகவாதிகள் விழிப்புடன் இருப்பது நல்லது.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வாகன யோகம் உண்டாகும்.

மாணவர்களுக்கு: பிற மொழிகளில் பாண்டித்தியம் உண்டாகும். குருவை வழிபடவும். சில நேரங்களில் மறதி ஏற்படும்.

பணம் வரும் தேதிகள்: செப்டம்பர் 28, 29.


சிம்மம்:
பொது: குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மன மகிழ்ச்சி பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். நல்ல தகவல் வந்து சேரும். பேச்சில் திறமை வெளிப்படும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடையூறுகளும் அவ்வப்போது ஏற்படும். அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் சூழும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். நாகரை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் வாரப் பின்பகுதியில் அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும்.

நிலபுலங்கள்: அளவோடு பயன் உண்டாகும். 4-ல் சனி இருப்பதால் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் சிலருக்கு ஏற்படும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

தொழில்: உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மதபோதகர்கள், வங்கிப் பணியாளர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்னைகள் சூழும்.

மாதர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். முயற்சி வீண்போகாது. புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சோர்வுக்கும் சோம்பலுக்கும் இடம் தரலாகாது.

பணம் வரும் தேதிகள்: செப்டம்பர் 30, அக்.1.


கன்னி:
பொது: சுக்கிரன், சனி, கேது ஆகியோரது நிலை அனுகூலமாக உள்ளது. இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. வார முன்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். வாரப் பின்பகுதியில் வீண் அலைச்சலும், இழப்புக்களும் உண்டாகும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. திருமாலையும், விஷ்ணு துர்கையையும் வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: சுக்கிர பலத்தால் பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் செலவுகளும் சங்கடங்களும் ஏற்படும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.

தொழில்: கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தொழிலாளர்களது நோக்கம் நிறைவேறும். கடல் வாணிபம் லாபம் தரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். ஆடை, அணிமணிகள் லாபம் தரும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம்.

மாதர்களுக்கு: மன உற்சாகம் கூடும். முக வசீகரம் உண்டாகும். நீண்ட நாளைய எண்ணம் ஈடேறும்.

மாணவர்களுக்கு: படிப்பில் அதிக கவனம் தேவை. கெட்டவர்களின் சகவாசம் கூடாது.

பணம் வரும் தேதி: செப்டம்பர் 25.


துலாம்:
பொது: செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராக இருந்துவரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். அறிவாற்றல் பளிச்சிடும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தின்மூலம் அனுகூலம் உண்டாகும். சூரியன், குரு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: வார முன்பகுதியில் பண நடமாட்டம் அதிகரிக்கும். பின்பகுதியில் செலவுகள் கூடும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். கணவனால்மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மக்களால் செலவுகளும் மன அமைதிக்குறையும் ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

நிலபுலங்கள்: சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் வருவாயோ கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில்: கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வியாபாரிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி பெருகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். மதிப்பு உயரும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும்.

பணம் வரும் தேதிகள்: செப்டம்பர் 25, 26, 27(பகல்).

விருச்சிகம்:
பொது: சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். உயர் பொறுப்புக்கள் தேடிவரும். பயணத்தால் நலம் உண்டாகும். சனிக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: குரு பலத்தால் பண வரவு அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தந்தையாலும் மக்களாலும் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும்.

நிலபுலங்கள்: அளவோடு வருவாய் கிடைக்கும். 4-ல் கேது இருப்பதால் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். கவனம் தேவை.

தொழில்: வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். அரசாங்கப்பணியாளர்களும் அரசியல்வாதிகளும் நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்னைகள் சூழும். உழைப்பு அதிகரிக்கவே செய்யும்.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கை வசதிகள் அதிகமாகும்.

மாணவர்களுக்கு: வெற்றிகள் குவியும். விநாயகரை வழிபடவும்.

பணம் வரும் தேதிகள்: செப்டம்பர் 28, 29.


தனுசு:
பொது: சூரியன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. புதன் 9-ல் இருந்தாலும் நலம் புரிவார். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலம் ஏற்படும். தோற்றப்பொலிவு கூடும். உயர்பதவிகளும் பொறுப்புக்களும் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் உண்டாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. எரிபொருள், மின்சாரம், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் ஏற்றம்-இறக்கமாகவே காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். வேலையாட்களிடம் முக்கியமான பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம்.

நிலபுலங்கள்: ஓரளவு லாபம் தரும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்புக் கூடிவரும்.

தொழில்: அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு விசேடமான நன்மைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுப்பணியாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

மாதர்களுக்கு: மனத்தில் தெளிவு பிறக்கும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். எதிரிகள் விலகுவார்கள்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

பணம் வரும் தேதிகள்: செப்டம்பர் 30, அக்.1.


மகரம்:
பொது: புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திறமை வீண்போகாது. தெய்வப் பணிகள் நிறைவேறும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். புதிய முயற்சிகள் கைகூடும். ராகு, கேது, செவ்வாய் ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். நற்காரியங்கள் நிகழும். நண்பர்கள் நலம் புரிவார்கள். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உடன்பிறந்தவர்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. பழைய சொத்துக்களை விற்றுவிட்டுப் புதியதை வாங்க வாய்ப்பு உண்டாகும்.


தொழில்: வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களது நிலை உயரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும் இயந்திரப்பணியாளர்களும் இன் ஜினீயர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. பயணம் சார்ந்த இனங்களில் எச்சரிக்கை தேவை. தீ, மின்சாரம், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு அவசியம் ஆகும்.

மாதர்களுக்கு: முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். பிறரால் போற்றப்படுவீர்கள்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான பாதை தெரியவரும். விளையாட்டு, விநோதங்களைத் தவிர்ப்பது நல்லது.

பணம் வரும் தேதி: செப்டம்பர் 25.


கும்பம்:
பொது: செவ்வாய், சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காணச் சந்தர்ப்பம் கூடிவரும். மனத்துணிவு அதிகமாகும். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சமுதாய நலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட நேரலாம். கண், முதுகு, மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். சூரியனுக்கும் குருவுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: குரு 8-ல் சூரியனுடன் கூடியிருப்பதால் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மக்களாலும் தந்தையாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும்.

நிலபுலங்கள்: செவ்வாயும் சுக்கிரனும் வலுத்திருப்பதால் புதிய நிலம், மனை, வீடு, வாகன யோகம் அமையும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு உண்டாகும்.

தொழில்: கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். தொழிலாளர்களது நோக்கம் நிறைவேறும். விவசாயிகளுக்கு வருவாய் கூடும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். எரிபொருள், வெடிப்பொருள், தளவாடங்கள், கட்டடப் பொருட்கள், சிவப்பு நிறப்பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

மாதர்களுக்கு: புனிதமான காரியங்களில் ஈடுபாடுகூடும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றம் தடைப்படும். படிப்பில் அதிக கவனம் தேவை. விளையாட்டுகளில் வெற்றி காணலாம்.

பணம் வரும் தேதிகள்: செப்டம்பர் 25, 26, 27 (பகல்).


மீனம்:
பொது: செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி அதிகமாகும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். பயணத்தால் நலம் உண்டாகும். பிரச்னைகள் குறையும். தெய்வப் பணிகள் நிறைவேறும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும்.


பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் திருப்தி தரும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். கடன் தொல்லை குறையும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். குடும்ப நலம் சிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கணவன் மனைவி இடையே களிப்புறவு கூடும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிவார்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.


நிலபுலங்கள்: சொத்துக்கள் சேரும். அவற்றால் வருவாயும் கிடைக்கும்.


தொழில்: வியாபாரிகள் புதிய யுக்தி முறைகளைக் கையாண்டு வெற்றி பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும். கணிதம், எழுத்து, விஞ்ஞானம், பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும். கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். அரசுப்பணியாளர்களது நிலை உயரும்.

மாதர்களுக்கு: திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தொலைந்த பொருள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். விளையாட்டுகளிலும் போட்டிகளிலும் வெற்றி கிடைக்கும்.

பணம் வரும் தேதிகள்: செப்டம்பர் 28, 29.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.