News
Loading...

அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிக்கு 3.34 கோடி பரிசு

அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிக்கு 3.34 கோடி பரிசு

வாஷிங்டன்: உலக அளவில் வாழ்க்கையை மேம்படுத்த தீர்வு கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி ரமேஷ் ரஷ்கருக்கு ரூ.3.34 கோடி பரிசு கிடைத்துள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த விஞ்ஞானி ரமேஷ் ரஷ்கர்(46). இவர் அமெரிக்காவின் கேமரா கலாச்சார ஆய்வு குழுவின் நிறுவனர். 

இவர் கலை மற்றும் அறிவியல் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். 75க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைமைகள் பெற்றுள்ளார்.  

கண் பாதுகாப்புக்கு குறைந்த செலவில் தீர்வு, புத்தகத்தை திறக்காமலேயே கேமரா உதவியுடன் வாசிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர் என்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்  ரமேஷ். 

இவருக்கு அமெரிக்காவின் லேமல்சன்-எம்ஐடி நிறுவனத்தின் ஆண்டு பரிசு கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.34 கோடி பரிசுத்தொகை கொண்டது. இந்த பரிசு உலக வாழ்க்கையை மேம்படுத்த தீர்வு கண்டறிந்ததற்காக ரமேஷ் ரஷ்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக லேமல்சன்-எம்ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘சமூக மேம்பாடு, தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களின் ஆரோக்கியத்தை மேற்படுத்துதல் ஆகியவற்றில் ரமேஷ் ரஷ்கரின் கண்டுபிடிப்புகள் மைல்கல்லாக விளங்குகிறது. இதற்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக லேமல்சன் எம்ஐடி நிறுவன இயக்குனர் ஸ்டீபைனி கோச் கூறுகையில், ரஷ்கர் பன்முகம் கொண்டவர். உலகில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த இவரது கண்டுபிடிப்புகள் உதவியுள்ளது என தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...