News
Loading...

ஒரு நாளில் 45ஆயிரம் வாடிக்கையாளர்கள் : பி.எஸ்.என்.எல் அதிரடி

ஒரு நாளில் 45ஆயிரம் வாடிக்கையாளர்கள் : பி.எஸ்.என்.எல் அதிரடி

தமிழகத்தில், ஒரே நாளில், 45 ஆயிரம், 'செல் போன்' வாடிக்கையாளர்களை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் பெற்றுள்ளது.

தொலைத் தொடர்பு துறையில், அதிகரித்து வரும் போட்டியால், வாடிக்கையாளர்களை கவர, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தமிழகம் முழுவதும், 'மெகா மேளா'வை நடத்தியது. எதிர்பார்த்த அளவில், புதிய, தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் கிடைக்காவிட்டாலும், அதிக அளவு, மொபைல் போன் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
அதே சமயத்தில் ரிலையன் நிறுவனத்தின் ஜியோ பிராண்டானது வாடிக்கையாளரிடையே பெருத்த வரவேற்பை பெற்ற நிலையிலும் கூட பிஎஸ்என்எல் இந்த இலக்கை எட்டியிருப்பதது ஆச்சிரியபடக்கூடியதாக உள்ளது

இது குறித்து, தமிழக தொலைத் தொடர்பு வட்ட அதிகாரிகள் கூறியதாவது:"வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், சென்னை வட்டம் தவிர்த்த, இதர மாவட்டங்களில், செப்., 15ல், 'மெகா மேளா' நடத்தினோம். அன்று, உடனே இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தோம். அதனால், ஒரே நாளில், 45 ஆயிரம், மொபைல் போன், 'சிம் கார்டுகள்' விற்பனையானது.

இதுதவிர, 2,600, 'இன்டர்நெட், பிராட் பேண்ட்' மற்றும் தொலைபேசி வாடிக்கையாளர்களும், புதிதாக கிடைத்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.