News
Loading...

இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்றவரின் குடும்பத்திற்கு தொண்டு நிறுவனம் ரூ.5 லட்சம் நிதியுதவி

இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்றவரின் குடும்பத்திற்கு தொண்டு நிறுவனம் ரூ.5 லட்சம் நிதியுதவி

ஒடிசா மாநிலத்தில் இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றவரின் குடும்பத்திற்கு சுலப் இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.

ஒடிசா மாநிலம், கலஹந்தி மாவட்டம் மெல்கார் கிராமத்தைச் சேர்ந்த தனா மஜ்கி மருத்துவமனையில் இறந்த தனது மனைவியை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்யவும் வசதியில்லாததால் இறந்த தனது மனைவின் உடலை தோளில் 10 கிலோ மீட்டர் தூரம் சாலையில் சுமந்து சென்ற சம்பவம் நாடும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இறந்த தனது மனைவின் உடலை தோளில் சுமந்து சென்ற தனா மஜ்கியின் குடும்பத்திற்கு சுலப் இண்டர்நேஷ்னல் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் நிதியுதவி வழங்க முன்வந்தது.

இதையடுத்து, அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் சர்மா என்பவர், மெல்கார் கிராமத்தில் உள்ள தனா மஜ்கியின் வீட்டிற்கு சென்று உடனடி செலவுக்காக ரூபாய் 10 ஆயிரம் மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கான வைப்பு நிதி பத்திரத்தையும் வழங்கினார்.

மேலும், தனா மஜ்கியின் மகள்களின் படிப்பு செலவுக்காக மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் வழங்கவும் சுலாப் நிறுவனம் முன்வந்துள்ளது.

தனா மஜ்கியின் அவலநிலை தொடர்பான தகவல் வெளியான பின்னர், கலஹந்தி மாவட்ட நிர்வாகம் இதுவரை, ஒரு மூட்டை அரிசியும், ரூ.30 ஆயிரமும் நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், தனியார் தொண்டு நிறுவனம் 5 லட்சம் ரூபாய் வழங்கியதுடன் இரு குழந்தைகளின் படிப்பை செலவையும் ஏற்க முன்வந்துள்ளதை அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...