News
Loading...

கரூரில் தேர்தல் நேரத்தில் சிக்கிய ரூ.5 கோடி: நத்தம்​ விஸ்வநாதன் மகனுக்கு சொந்தமானது​

கரூரில் தேர்தல் நேரத்தில் சிக்கிய ரூ.5 கோடி: நத்தம்​ விஸ்வநாதன் மகனுக்கு சொந்தமானது​

கரூரில் சிக்கிய ரூ.5 கோடி நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத்துக்கு சொந்தமானது வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் ரூ.5 கோடி சிக்கியது. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் இதற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. 

நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத் கரூர் அன்புநாதனுக்கு பணம் அனுப்பியதற்கு ஆதாரம் கிடைத்தது என வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நத்தம் விஸ்வநாதன், மகன் அமர்நாத் வீடு, அலுவலகம், கல்லூரியில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. 3 நாட்கள் சோதனையில் கணக்கில் வராத ரூ.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் வைர வியாபாரி கீர்த்திலால் கடையில் வருமானவரித்துறை ரூ.2.5 கோடி பறிமுதல் செய்துள்ளது. இதனால் கீர்த்திலால், விஸ்வநாதன் மகன் அமர்நாத் தொடர்பு அம்பலம் ஆகியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...