News
Loading...

புத்தக சுமை 7 முதல் 13 வயது வரையிலான மாணவர்களுக்கு கூன் விழும் ஆபத்து

புத்தக சுமை 7 முதல் 13 வயது வரையிலான மாணவர்களுக்கு கூன் விழும் ஆபத்து

கொல்கத்தா: தொழில்துறை அமைப்பான ‘அசோசேம்’, டெல்லி, கால்கத்தா, சென்னை பெங்களூரு, மும்பை, ஐதராபாத், புனே, அகமதாபாத், லக்னோ ஜெய்ப்பூர், டேராடுன் உள்ளிட் நகரங்களில் உள்ள 2,500 மாணவர்கள் மற்றும் 1,000 பெற்றோர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதுபற்றி அசோசேம் அமைப்பின் உடல்நலக்குழு தலைவர் பி.கே.ராவ் கூறியதாவது: 

7 முதல் 13 வயது வரையிலான மாணவர்களின் புத்தகச் சுமை தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 88 சதவீத குழந்தைகள் அவர்களது உடல் எடையை விட 45 சதவீதம் அளவுக்கு கூடுதல் சுமையை புத்தகப் பையில் எடுத்து செல்வது தெரியவந்துள்ளது. பள்ளி குழந்தைகளின் புத்தகப் பை தொடர்பான சட்டம் 2006ன்படி புத்தகப் பையின் சுமை மாணவர்களின் எடையை விட 10 சதவீதம் அளவுக்கு மேல் இருக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் எந்த பள்ளியும் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. மாணவர்களின் உடைகள், விளையாட்டு பொருட்களை வைக்க லாக்கர் வசதி செய்து தரவேண்டும் எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகங்கள் இதை பின்பற்றுவதில்லை.  இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் நீச்சல் உடை, கிரிக்கெட் மட்டை, ஸ்கேட்டிங் பொருட்கள், டேக்வான்டோ பயிற்சி கருவிகள் ஆகியற்றை ஒருநாள் விட்டு ஒருநாள் தங்களது பையில் எடுத்து செல்வது தெரியவந்துள்ளது. 

இதனால் இவர்களில் 68 சதவீதம் பேருக்கு ஆரம்பத்தில் முதுகு வலியும் தொடர்ந்து மீள முடியாத வலியும் உருவாகி இறுதியில் மாணவர்களுக்கு முதுகு வளைந்து கூன் விழும் ஆபத்து உள்ளது.உடனடியாக இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகங்களும், அரசும் தீவிர கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்.இவ்வாறு ராவ் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...