News
Loading...

உத்தர பிரதேச மக்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் : அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

ஆனால், இன்றுவரை அகிலேஷ் யாதவால் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க முடியவில்லை. தற்போது அந்த லேப்டாப்பை ஸ்மார்ட் போன் திட்டமாக மாற்றியுள்ளார். அதன்படி உத்தர பிரதேச மக்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் போன் உத்தர பிரதேச அரசு ஊழியர்களுக்கும், அவர்களைச் சார்ந்துள்ள பிரிவினருக்கும் பொருந்தாது. ‘‘சமாஜ்வாடி ஸ்மார்ட் போன் திட்டம் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் உதவி புரிவதற்காக கொண்டு வரப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களின் கருத்துக்களை கேட்கவே பயன்படும். இந்த ஸ்மார்ட் போன்கள் அடுத்த ஆண்டு முதலில் வருபர்கள்/பதிவு செய்தவர்கள் அடிப்படையில் இந்த ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். இந்த போனில் அரசின் திட்டங்கள் குறித்த அப் (APP) இடம்பெற்றிருக்கும். அதன்மூலம் மக்களுக்கு வீடியோ மற்றும் எழுத்து வடிவில் தகவல்கள் அளிக்கப்படும்.

இந்த செல்போன்களை பெறுவோர்கள் உயர்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாவும், அவர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் அவரது குடும்பத்தினரின் வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்’’ என்று அகிலேஷ் யாதவ் கூறியதாக அரசு செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...