News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - மேஷம்

புரட்டாசி மாத ராசி பலன் - மேஷம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை

நினைத்தது நிறைவேறும் நேரம்!

உண்மைக்காகப் போராடும் உன்னத குணம் படைத்த மேஷ ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 9–ம் இடத்தில் சஞ்சரித்து ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தர வாதம் தரப்போகிறார். 

பணியில் தொய்வு, பரபரப்பாகச் செயல்படும் சூழ்நிலை, பிணிகளுடன் கூடிய உடல்நிலை, பிறருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை, வணிகத்தின் கடன் தொல்லை, என இருந்த இடையூறு கள் இனி மாறப்போகின்றது.

பஞ்சம ஸ்தானத்தில் ராகு பலம் பெற்றிருப்பதால் நெஞ்சம் மகிழ 
நடந்து கொண்ட பிள்ளைகள் இப்பொழுது கொஞ்சம் நிலை மாறலாம்.  அடுத்தவர்கள் பொறுப்பில் ஒப்படைத்த குழந்தைகளை இனி உங்கள் பொறுப்பிலேயே கவனித்துக் கொள்வது நல்லது. 

6–ம் இடத்தில் மூன்று கிரகங்கள் முற்றுகையிட்டுள்ளன. தன சப்தமாதிபதியான சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கின்றார். பஞ்சமாதிபதியான சூரியனும் 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவும் அவரோடு இணைந்திருக்கின்றார்கள். தனாதிபதி நீச்சம் பெற்றால் தனவரவில் தடைகள் ஏற்படும் என்பார்கள். ஆனால் நீச்சன் நின்ற ராசிநாதன் புதன் பரிவர்த்தனை யோகம் பெற்று விளங்குவதால் நல்ல பலன்கள் உங்களை நாடிவரும்.

உள்ளம் மகிழும் சம்பவங்கள் வந்து கொண்டே இருக்கும். தேவைப்பட்ட பொழுது தேவைப்பட்ட பொருட்களை வாங்கப் பணம் தேடி வரும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர்.  குரு வலிமை இழந்திருப்பது யோகம்தான். விரயாதிபதி வலிமை இழக்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

ராசிநாதன் செவ்வாயை மேலும் பலப்படுத்த செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்வதோடு நவராத்திரி விழாவைக் கொண்டாடி பராசக்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். 

சுகம் தரும் சுக்ரப்பெயர்ச்சி!

செப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசிக்குச் சுக்ரன் செல்ல இருக்கின்றார். தனசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். கல்யாணக் கனவுகள் நனவாகும். தங்கு தடைகள் தானாக விலகும். பிரச்சினைகளாலும், பிறரின் சூழ்ச்சிகளாலும் வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் தகவல் வியக்கச் செய்யும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் மனதில் நினைத்ததை உடனே செய்வீர்கள்.

உச்ச புதனின் சஞ்சாரம்!

புதன் இதுவரை சிம்மத்தில் சஞ்சரித்து வந்தார். அக்டோபர் 4–ம் தேதி கன்னி ராசிக்கு வந்து உச்சம் பெறுகின்றார். 6–க்கு அதிபதி உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல என்றாலும் குருவோடு இணைந்திருப்பதால் கெடுபலன்கள் குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரலாம். எதிரிகளின் தொல்லை குறைய எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆரோக்கியத் தொல்லை அகலும். பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் ஒரு சிலருக்கு வந்து சேரும். தொழில் செய்தவர்களுக்கு திடீரென இடமாற்றம் வந்து சேரலாம்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 14–ம் தேதி விருச்சிகத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார். அதன்பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். நிலையான வருமானம் கிடைக்கும். வீடு, வாகனம், பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். இம்மாதம் நவராத்திரி நாட்களில் விரதமிருந்து ஒன்பது நாட்களிலும் அம்பிகையை வழிபாடு செய்து இன்பங்களை வரவழைத்துக் கொள்ளுங்கள். 

 பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் மாதமாகும். ராசிநாதன் பலம் பெற்றிருப்பதால் உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டு. உறவினர்களின் உதவி கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. கணவன்–மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு. குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபட்டால் ஆதரவுக் கரம் நீட்டுபவர்
களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரதோஷ வழிபாடு உங்களுக்கு பெருமைகளைச் சேர்க்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

பணத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்  நாட்கள்:  செப்டம்பர்: 22, 23, 26, 27  அக்டோபர்: 8, 9, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.