News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - மகரம்

புரட்டாசி மாத ராசி பலன் - மகரம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை

மாலையும் வேலையும் மகிழ்ச்சியோடு வரும் நேரம்!

நெருங்கிப் பழகியவர்களுக்காக எதையும் செய்யுமளவிற்கு பாசம் கொண்டுள்ள மகர ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே, குரு பார்க்கக் கோடி தோஷ நிவர்த்தி என்பதற்கேற்ப சகல முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கப் போகின்றது. 

மூன்றாமிடத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் சகோதர வர்க்கத்தினர்களின் பாசத்திற்கும், நேசத்திற்கும் ஆளாக நேரிடும். தடுமாற்றங்கள் அகலும். தனவரவு திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகளப் பூர்த்தி செய்து கொள்ளும் விதத்தில் இம்மாத கிரக நிலைகளின் சஞ்சார நிலை இருக்கின்றது.

மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக் கூடுதலாக இருக்கும். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா? என்ற மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய தொழில் வெற்றிநடை போட்டாலும் புதிய தொழில் ஒன்றை தொடங்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடியே சலுகைகள் கிடைக்கும். 

சூரியன் இப்பொழுது 9–ம் இடத்தில் சஞ்சரிப்பது ஒருவழிக்கு யோகம் தான். அவரோடு குருவும், சுக்ரனும் இணைந்திருப்பதால் வீண் விரயங்கள் செய்ய அனுமதிக்கமாட்டீர்கள். சுபவிரயங்களை அடுக்கடுக்காக செய்ய இயலும். குறிப்பாக குழந்தைகளின் மண விழாக்கள், உடன்பிறப்புகளின் மண விழாக்கள், பெற்றோர்களின் மணி விழாக்கள், காது குத்து, சீமந்தம் போன்றவற்றை நடத்துவதற்கான முயற்சி கைகூடும். 

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கைகூடிவரும். குருசந்திர யோகத்தோடு மாதம் தொடங்குவதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறப் போகின்றது. பணி நிரந்தமாகவில்லையே என்ற கவலை இனி அகலும். இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொண்டால் தடைகற்களையும், படிக்கற்களாக மாற்றிக் கொள்ள இயலும். அதுமட்டுமல்லாமல் 2–ல் கேதுவும், 8–ல் ராகுவும் இருப்பதால் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கின்றது. வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பது அவ்வளவு நல்லதல்ல. எனவே ராகு–கேதுக்களுக்குப் பிரீதி செய்வதும் நல்லது. அதுமட்டுமல்லாமல் அஷ்டமத்தில் ராகு இருப்பதால் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். துரயங்கள் துள்ளி ஓடும்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

செப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். 5, 10–க்கு அதிபதி 10–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய பங்குதாரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வந்திணைய முன்வருவர். அதிகார வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு புதிய பாதை உங்களுக்குப் புலப்படும். மதிப்பும், மரியாதையும் உயரும். பிள்ளைகள் வழியிலும் உதிரி வருமானம் கிடைக் கும்.

உச்ச புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 4–ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகின்றார். 9–ல் புதன் உச்சம் பெறும் பொழுது, ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். அன்பு நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பர். உடல்நலம் சீராகும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. புதிய பதவிகள் அரசியலில் ஈடுபாடுகொண்டவர்களுக்கு வந்து சேரும். பயணங்களால் பலன் கிடைக்கும் நேரமிது. குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்றவீர்கள்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 14–ம் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொட்டதெல்லாம் பொன்னாகும். தொல்லையெல்லாம் விலகி ஓடும். பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் வந்தது என்று சொல்லி மகிழ்வீர்கள். பணிச்சுமை குறையும். இனிக்கப் பேசும் நண்பர்கள் எளிதில் உங்கள் காரியத்தை முடித்துக்கொடுப்பர். இம்மாதம் துர்க்கை,சரஸ்வதி, லட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். 

 பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் உங்கள் எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும் மாதமாகும். ஆரோக்கியத் தொல்லை அடியோடு அகலும். பாராட்டு மழையில் நனைவீர்கள். பணிகளிலிருந்த தொய்வு மாறும். வருமானம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே வரும். கணவரின் முழுமையான அன்பிற்கு பாத்திரமாவீர்கள். கலகலகப்பாகப் பேசும் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம். தாய்வழிச் சொத்துக்களும், தனலாபமும் கிடைப்பதற்கான  அறிகுறிகள் தோன்றம். நவராத்திரி விரதமிருந்து முப்பெரும் தேவியரை வழிபட்டு ஒப்பற்ற வாழ்க்கை அமையும்.

பக்தர்களின் பழக்க வழக்கங்கள்...

ஒருவர் பக்திமானாகத் திகழ கடைப்பிடிக்க வேண்டியவை:–

நெற்றியில் திருநீறு அணிய வேண்டும். அந்தி, சந்தி, அர்த்தசாமம் ஆகிய வேளைகளில் ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும். பெற்றோர், சான்றோர், குரு ஆகியோரை வணங்க வேண்டும். சிவாலய வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். புராணங்களை படிக்கவும், கேட்கவும் வேண்டும்.

பணத் தேவையைப் பூர்த்திசெய்யும் நாட்கள் செப்டம்பர்: 19, 20, 30, அக்டோபர் : 1, 5, 6, 7, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:  கருநீலம்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.