News
Loading...

தமிழகத்திற்கு செப். 21 முதல் 10 நாட்களுக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்

தமிழகத்திற்கு செப். 21 முதல் 10 நாட்களுக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் கன்னடர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் இன்று காவிரி மேற்பார்வை குழு கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது. அப்போது கடந்த 9 ஆண்டுகளில்  தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் பயன்படுத்திய காவிரி நீரின் அளவு குறித்த புள்ளி விவரங்களை மேற்பார்வை குழு ஆய்வு செய்தது.

பின்னர் கூட்டத்தின் முடிவில், செப்டம்பர் 21 முதல் 3000 கன அடி நீரை 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி மேற்பார்வை குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கூட்டத்தில் நீர் இருப்பு, நீர் வரத்து பற்றி அறிந்துகொள்ள புதிய முறை தேவை என்றும் மேற்பார்வை குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு வந்த நீர்வரத்தை கருத்தில் கொண்டு கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேற்பார்வை குழு தலைவர் சசிசேகர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் ''காவிரியில் நீர் திறக்க உத்தரவிட காவிரி மேற்பார்வை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பின்படியே காவிரி மேற்பார்வை குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது'' என்று தெரிவித்தார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...